சும்மா.. தரை பளபளவென மின்ன வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க.. அசந்துடுவீங்க
நம் தாத்தா, பாட்டி காலத்தில் வீடுகளில் பார்த்தால், சிமெண்ட் கொண்டு தரை போட்டிருப்பார்கள். வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என்றால், துடைப்பத்தை கொண்டு ஈஸியா தரையை சுத்தம் செய்து விடுவார்கள். ஆனால், காலம் மாற, மாற தற்போது அனைவரும் வீட்டில் தற்போது மொசைக் மற்றும் மார்பிள் தரை தான் உள்ளது.
பார்ப்பதற்கு என்னவோ ரொம்ப அழகாகத்தான் இருக்கும். ஆனால், கறை படிந்து விட்டால் அதை சுத்தம் செய்வதுதான் கடினம். அவசர, அவசரமாக வேலைக்கு செல்பவர்கள் மொசைக் தரையை சுத்தம் செய்யும்போது, மூலை, முடுக்குகளை அப்படியே விட்டுவிட்டு சுத்தம் செய்து வேலைக்கு ஓடிவிடுவார்கள். சிலர் சோம்பேறித்தனத்தால் சுத்தம் செய்யாமல் விட்டுவிடுவார்கள். இதனால் மொசைக் தரை சீக்கிரம் அதன் நிறம் பழுதடைந்துவிடும்.
கவலை வேண்டாம். மொசைக்கில் படியும் அழுக்கைகளை போக்க சில இயற்கையான வழியைப் பார்க்கலாம் -
1. முதலில் மொசைக் டைல்ஸை சுத்தம் செய்யப்போகும்போது, அதன் மேல் 2 பக்கெட் தண்ணீரை ஊற்றி நன்றாக ஊற வைக்க வேண்டும். பின்னர், டைல்ஸ் மென்மையானதும் சுத்தம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் உங்களுக்கும் சிரமம் இருக்காது.
2. 2 லிட்டர் தண்ணீரை சூடுபடுத்தி, அதில் 3 ஸ்பூன் பேக்கிங் சோடாவை போட்டு கலந்து கொள்ள வேண்டும். பின்னர், இந்த தண்ணீரை மொசைக் தரையில் ஊற்றி 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்னர், தரை பிரஷ் கொண்டு தேய்த்தால் பளபளவென சுத்தமாகிவிடும்.
3. மருந்து கடைகளில் ஹைட்ரஜன் பெராக்சைடு விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்கி வந்து 2 லிட்டர் தண்ணீரில் 4 டீஸ்பூன் ஹைட்ரஜன் பெராக்சைடு திரவத்தை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர், இந்த தண்ணீரை மொசைக் தரையில் ஊற்றி 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்னர், பிரஷ் கொண்டு தேய்த்தால் கண்ணாடிபோல் தரை சுத்தமாகிவிடும்.
4. போராக்ஸ் பவுடரும் தரையை சுத்தம் செய்ய பயன்படுகிறது. 2 லிட்டர் தண்ணீரில் போராக்ஸ் பவுடரை தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும். பின்னர், தரையில் துடைப்பம் உதவுடன் போராக்ஸ் தரை முழுவதும் படியும் வரை தேய்க்க வேண்டும். 10 நிமிடங்கள் இப்படி ஊற வைத்தபிறகு, பிரஷ் அல்லது துடைப்பம் கொண்டு தரையை சுத்தம் செய்தால் சும்மா.. மினுமினுவென தரை மின்னும்.
5. மொசைக் தரையை சுத்தம் செய்ய வினிகர், சோப்பு தூள், டைல்ஸ் கிளீனர் அமிலம் மற்றும் அம்மோனியா ஆகியவற்றை கொண்டு கூட தரையை சுத்தம் செய்யலாம். ட்ரை பண்ணி பாருங்க... அசந்துடுவீங்க...
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |