கொசுவர்த்தி சுருளை தினமும் பயன்படுத்துறீங்களா! அப்போ இந்த நோய்கள் வர 90% வாய்ப்புள்ளது
மழைக்காலம் என்பதால் மழை பெய்து ஆங்காங்கு மழை நீர் தேங்கி, கொசுக்கள் பெருக்கமடைகின்றன. இதனால் வீட்டில் கொசுத் தொல்லையால் நிறைய பேர் அவதிப்படுவதுண்டு.
மேலும் தற்போது டெங்கு காய்ச்சலால் நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்கள். டெங்கு காய்ச்சலுக்கு முக்கிய காரணமே கொசுக்கள் தான்.
எனவே கொசுக்களிடமிருந்து நம்மை பாதுகாக்க கொசுக்களை அழிக்க பல்வேறு பொருட்கள் கடைகளில் விற்கப்பட்டாலும், இன்னும் பலரது வீடுகளில் கொசுவர்த்தி சுருள் பயன்படுத்தப்படுகிறது.
ஒருவர் கொசுவர்த்தி சுருளின் புகையை தினமும் சுவாசித்தால், எந்தமாதிரியான நோய்களால் பாதிக்கப்படுவார்கள் என்பதை பார்ப்போம்.
உண்டாகும் நோய்கள்
கொசுவர்த்தி சுருளில் உள்ள பொருட்கள், தலைவலியைத் தூண்டக்கூடியது. அதனால் தான் பெரும்பாலானோர் கொசுவர்த்தியை ஏற்றியதும் தலைவலியை சந்திக்கிறார்கள்.ஆகவே கொசுக்களை அழிக்க கொசுவர்த்தியை பயன்படுத்துவது அவ்வளவு நல்லதல்ல.
கொசுவர்த்தியில் சருமத்தில் தடிப்புகள் மற்றும் அழற்சியை ஏற்படுத்தும் உட்பொருட்கள் நிறைந்துள்ளன. ஆகவே ஏற்கனவே அழற்சியைக் கொண்டவர்கள், கொசுவர்த்தியைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதே நல்லது.
கொசுக்களை அழிக்க பயன்படுத்தப்படும் கொசுவர்த்தி சுருளில் கார்சினோஜென்கள் உள்ளன.இந்த கார்சினோஜென்களை ஒருவர் தொடர்ந்து சுவாசிக்கும் போது, அது நுரையீரலில் புற்றுநோயை உண்டாகும் செல்களின் வளர்ச்சியை அதிகரித்து, புற்றுநோயின் அபாயத்தை அதிகரித்துவிடும்.
கொசுக்களை அழிக்க வீட்டில் கொசுவர்த்தியை தினமும் பயன்படுத்தினால், அதன் புகையை சுவாசித்து ஆஸ்துமா, சுவாச பிரச்சனைகள் மற்றும் இருமலால் கூட அவதிப்படக்கூடும்.
வீட்டில் உள்ள குழந்தைகள் , தினமும் கொசுவர்த்தி சுருளை ஏற்றி, அதன் புகையை சுவாசித்தால், அதில் உள்ள கெமிக்கல்கள் குழந்தைகளுக்கு தீவிரமான சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தி, அவர்களின் ஆரோக்கியத்தை மோசமாக்கலாம்.
Dr.mayank shukla
எனவே தற்போது கொசுவர்த்திக்கு மாற்றாக பல்வேறு கொசுக்களை அழிக்கும் பொருட்கள் கடைகளில் விற்கப்படுகின்றன.
ஒருவேளை அவற்றை வாங்க முடியாவிட்டால், வேப்பிலை போன்ற இயற்கை வழிகளின் மூலம் கொசுக்களை விரட்டலாம். எனவே உடல் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், கொசுவர்த்தி சுருளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |