இங்கிலாந்துக்கு எதிராக கோல்டன் டக் அவுட்டான இந்திய கேப்டன் கோஹ்லி! டோனியை முந்தி செய்த ஒரு மோசமான சாதனை
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டக் அவுட் ஆன இந்திய அணி கேப்டன் கோஹ்லி மோசமான சாதனை ஒன்றை செய்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆனார்.
விராட் கோஹ்லி கோல்டன் டக் அவுட்டாகி தேவையற்ற சாதனைக்கு ஆளாகி உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை (9) டக் அவுட்டான இந்திய கேப்டன் என்ற சாதனையை விராட் கோஹ்லி செய்துள்ளார்.
இதற்கு முன் டோனி அதிகபட்சமாக 8 முறை டக் அவுட்டாகி இருந்தார்.
அதிக டக் அவுட்டான இந்திய கேப்டன்கள்: விராட் கோஹ்லி- 9 (101 இன்னிங்ஸ்)
மகேந்திர சிங் டோனி - 8 (96 இன்னிங்ஸ்)
எம்.கே.பட்டோடி - 7 (73 இன்னிங்ஸ்)
கபில் தேவ் - 6 (48 இன்னிங்ஸ்)