ரூ. 2 லட்சத்திற்கு விற்கப்படும் உலகின் அதிசயமான தேங்காய்.., ஏன் தெரியுமா?
உலகின் அனைத்து வகை உணவுகளிலும் முக்கியப்பங்கு வகிக்கும் தேங்காயில் சுவை மட்டுமின்றி பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன.
பொதுவாக நாம் தேங்காயை 5 ரூபாய் முதல் அதிகபட்சம் 50 ரூபாய் வரை வாங்கிருப்போம்.
ஆனால் லட்சங்களில் விற்கப்படும் இந்த அதிசய தேங்காய் குறித்து பலருக்கும் தெரியாது.
இந்த அரிய வகை தேங்காய் கோகோ டி மெர் அல்லது இரட்டை தேங்காய் என்று அழைக்கப்படுகிறது.
இந்தியப் பெருங்கடலில் உள்ள அழகிய சீஷெல்ஸ் தீவுகளில் வளரும் தென்னை மரம் தான் உலகின் மிகப்பெரிய இந்த தேங்காயை உற்பத்தி செய்கிறது.
அரை மீட்டர் நீளம் வரை வளரும் இந்த தேங்காய் சுமார் 25 கிலோகிராம் எடையுள்ளதாக இருக்கும்.
கோகோ டி மெர் ஒரு தேங்காயின் மதிப்பு ரூ.50,000 முதல் ரூ.2,00,000 வரை விற்கப்படுகிறது.
சீஷெல்ஸில் உள்ள சில தீவுகளில் மட்டுமே வளரும் தன்மை கொண்ட இந்த தேங்காய் மிகவும் விலை உயர்ந்தது.
இந்த மிகப்பெரிய தேங்காய் சீஷெல்ஸின் தேசிய சின்னமாக உள்ளது. மேலும், இது IUCN பட்டியலில் அழிந்து வரும் இனமாகவும் உள்ளது.
தற்போது இந்த தேங்காய் காய்க்கும் தென்னை மரங்கள் சுமார் 8,000 மரங்களாகக் குறைந்துவிட்டன.
அரசாங்கத்தின் கடுமையான கண்காணிப்பின் கீழ் உள்ள இந்த தேங்காயின் திருட்டுகளை தடுக்க, மரங்களை சுற்றி இரும்பு கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |