உலகின் மிக விலையுயர்ந்த 7 பைகள் - விலை எவ்வளவு இருக்கும் தெரியுமா?
பொதுவாகவே பெண்களுக்கு கைப்பைகள் (Hand Bags) என்றால் மிகவும் பிடிக்கும்.
பல்வேறு மாடல்களில் கைப்பைகளை பெண்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். இந்நிலையில் உலகின் மிக விலை உயர்ந்த 7 கைப்பைகள் குறித்து தற்போது பார்க்கலாம்.
1. Mouawad 1001 நைட்ஸ் டயமண்ட் பர்ஸ் (Nights Diamond Purse)
ரூ. 3.8 மில்லியன் டொலர் மதிப்பில், Mouawad 1001 நைட்ஸ் டயமண்ட் பர்ஸ் உலகின் விலையுயர்ந்த கைப்பையில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த புகழ்பெற்ற கலைப்படைப்பு 18-காரட் தங்கத்தால் ஆனது மற்றும் இளஞ்சிவப்பு, மஞ்சள் வைரங்கள் உட்பட 4,517 வைரங்களைக் கொண்டுள்ளது. இது ஆடம்பர மற்றும் செழுமையின் ஒப்பிடமுடியாத அளவை வெளிப்படுத்துகிறது.
இந்த அழகான பர்ஸின் விலை இந்திய சந்தையில் சுமார் ரூ. 28.9 கோடி ஆகும்.
2. ஹெர்ம்ஸ் கெல்லி ரோஸ் தங்க கைப்பை (Hermes Kelly Rose Gold handbag)
ஹெர்ம்ஸ் கெல்லி ரோஸ் கோல்ட் ஹேண்ட்பேக், 2 மில்லியன் அமெரிக்க டொலர் விலையில் விற்கப்படுகிறது. இது 1,160 வைரங்களைக் கொண்டுள்ளது. இந்தியாவில் சுமார் ரூ. 15.2 கோடி விலையில் இது கிடைக்கப் பெறும் என கூறப்படுகின்றது.
3. Hermes Chaine'd Ancre Bag
Hermes Chaine'd Ancre Bag 1.4 மில்லியன் அமெரிக்க டொலர் விலையில் கிடைக்கிறது. மேலும் இது 1,160 வைரங்கள் சிக்கலான நங்கூரம் வடிவ சங்கிலி இணைப்புகளில் அமைக்கப்பட்ட ஒரு அரிய ஆடம்பர பை ஆகும். இதன் மதிப்பு இந்தியாவில் சுமார் ரூ. 10.7 கோடி ஆகும்.
4. லானா மார்க்ஸ் கிளியோபாட்ரா கிளட்ச் (Lana Marks Cleopatra Clutch)
லானா மார்க்ஸ் கிளியோபாட்ரா கிளட்ச், 400,000 அமெரிக்க டொலர் விலையில் கிடைக்கிறது. இது 1,600 வெள்ளை வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு ஆடம்பரமான பை ஆகும். மேலும் இது இந்தியாவில் சுமார் ரூ. 3.1 கோடி வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5. Niloticus Crocodile Himalaya Birkin
நிலோடிகஸ் முதலை ஹிமாலயா பர்கின், 379,000 அமெரிக்க டொலர் விலையில் கிடைக்கிறது. கம்பீரமான இமயமலை மலைகளால் ஈர்க்கப்பட்ட 240க்கும் மேற்பட்ட வைரங்களைக் கொண்ட ஒரு அரிய படைப்பாகவும் இது பார்க்கப்படுகிறது.
6. Chanel's "Diamond Forever" Handbag
சேனலின் "டைமண்ட் ஃபாரெவர்" ஹேண்ட்பேக், 261,000 அமெரிக்க டொலர் மதிப்புடையதாகும். 334 வெள்ளைத் தங்க வைரங்களைக் கொண்ட ஒரு அரிய பொருளாகவும் பார்க்கப்படுகிறது. இதுவரை 13 மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் இந்தியாவில் சுமார் ரூ. 2 கோடி வரையில் கிடைக்கப்படுகிறது.
7. Fuchsia Diamond-Studded Hermes Birkin
Fuchsia Diamond-Studded Hermes Birkin, 222,000 அமெரிக்க டொலர் விலையில் கிடைக்கிறது. 18 காரட் வெள்ளைத் தங்கம் மற்றும் வைரங்களைக் கொண்ட ஒரு ஆடம்பரமான பை ஆகும். இது இந்திய சந்தையில் சுமார் ரூ. 1.7 கோடிக்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |