துபாயின் மிகவும் விலையுயர்ந்த வீடு; அப்படி என்ன தான் இருக்கு?
உலகிலேயே ஆடம்பர வாழ்க்கை முறைக்கு பெயர் போன நாடு துபாய்.
ரஷ்யாவில் உள்ள பணக்காரர்கள் முதல் இந்தியாவில் உள்ள முகேஷ் அமெ்பானி வரை துபாயில் ஆடம்பரமான வீடுகளை வாங்கி வருகின்றார்கள்.
அந்தவகையில் துபாயில் அரண்மனை போன்று ஒரு வீடு இருகின்றது. இந்த வீட்டின் விலை மட்டும் சுமார் 750 மில்லியன் வரை செல்லும் என்கின்றனர்.
ஆகவே இந்த பதிவில் அந்த வீட்டில் இருக்ககூடிய அம்சங்கள் பற்றி சற்று விரிவாக தெரிந்துக்கொள்வோம்.
துபாயில் விலையுயர்ந்த வீடு
அரண்மனை வடிவில் கட்டப்பட்டு வந்த இந்த வீடானது சுமார் 750 மில்லியன் திர்ஹாம் அதாவது 1,600 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால் துபாயில் மிகவும் விலையுயர்ந்த வீடு என்றும் இது அழைக்கப்படுகிறது.
துபாயில் பல கட்டிடங்கள் கோடி கணக்கில் விற்கப்பட்டாலுமே, சதுரடி மதிப்பில் இதுதான் விலையுர்ந்தது.
இது துபாயின் பெவர்லி ஹில்ஸ் என்று பிரபலமாக அறியப்படும் எமிரேட்ஸ் ஹில்ஸில் அமைந்துள்ளது.
இந்த வீட்டில் ஜந்து படுக்கையறைகள் மாத்திரமே இருகின்றது. ஆனால் ஒவ்வொன்றும் சுமார் 60,000 சதுர அடியில் அமைந்துள்ளது.
வீடு கட்டுமான பணியிற்கு பயன்படுத்தப்பட்ட பளிங்கு கற்கள் மட்டுமே $27 மில்லியன் டாலர்கள் மதிப்புடையது என்கிறார்கள்.
அது மட்டுமில்லாமல் சுமார் 7,00,000 தங்கத் தாள்களைப் பயன்படுத்தி இந்த வீடு கட்டப்பட்டுள்ளது.
இந்த வீடு "மார்பிள் பேலஸ்" என்று அழைக்கபடுகின்றது. அதற்கான காரணம் என்னவென்றால், கட்டிடம் சுமார் 80 முதல் 100 மில்லியன் திர்ஹாம் மதிப்பிலான மிகவும் காஸ்ட்லியான இத்தாலிய மார்பிள் கல்லால் கட்டப்பட்டுள்ளது.
இங்கு 5 பெரிய படுக்கையறைகள், 19 குளியலறைகள் மற்றும் பணியாளர்கள் தங்கக்கூடிய 12 அறைகள் காணப்படுகின்றன.
15 கார்கள் வரை வைத்திருக்கக்கூடிய ஒரு கேரேஜ், வீட்டின் தரை மட்டத்தில் பொழுதுபோக்கு மற்றும் உணவருந்துவதற்கான இடங்கள் உள்ளன.
19 ஓய்வறைகள், உட்புற மற்றும் வெளிப்புற ஸ்விம்ங் பூல், 80,000 லிட்டர் தண்ணீர் உடன் பவளப்பாறை கொண்ட ஸ்விம்ங் பூல், ஒரு சிறிய மின் நிலையம் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை அறைகள் மற்றும் 24 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட ஜக்குஸி போன்றவைகளும் காணப்படுகின்றது.
மேலும் இந்த வீடானது 12 வருடங்களாக கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |