இந்தியாவின் ஒரு மாநிலத்தில் மட்டும் விளையும் அதிசய மாம்பழம்.., விலை எவ்வளவு தெரியுமா?
முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் பொதுவாக பழங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது.
வருடம் முழுவதும் பல்வேறு பழங்களை சாப்பிட்டாலும் கோடைகாலத்தில் மட்டுமே கிடைக்கும் மாம்பழத்தை அனைவரும் விரும்புவார்கள்.
கிட்டதட்ட இந்தியாவில் மட்டும் 1500க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் மல்கோவா, ருமானி, செந்தூரம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மாம்பழ வகைகள் விளைகின்றன.
அந்தவகையில், இந்தியாவில் அதிகம் மாம்பழங்கள் விளையும் மாநிலங்களில் பிகாரும் ஒன்று. இங்கு பல பிரபலமான மாம்பழ வகைகள் பயிரிடபடுகின்றன.
பீகார் உலகின் மிகவும் விலையுயர்ந்த மற்றும் அரிதான மாம்பழங்களில் ஒன்றான மியாசாகி மாம்பழத்தை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது.
அதாவது, பாட்னா மாவட்டத்தின் மசௌர்ஹி தொகுதியில் அமைந்துள்ள கோரியவன் கிராமத்தில் மட்டுமே மியாசாகி மாம்பழம் பயிரிடப்படுகிறது.
சூரியனின் முட்டை என்ற பெயர்பெற்ற இந்த மாம்பழம் அதன் சுவை மற்றும் சிவப்பு நிறத்தால் தனித்துவமாக இருக்கிறது.
இந்த மாம்பழம் இயற்கையாகவே ஒரு தனித்துவமான இனிப்பையும், நறுமணத்தையும் கொண்டு அனைவரையும் ஈர்க்கிறது.
ஒவ்வொரு மியாசாகி மாம்பழமும் பொதுவாக 350 முதல் 550 கிராம் வரை எடையுள்ளதாக இருக்கும்.
உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழங்களில் ஒன்றான மியாசாகி மாம்பழத்தின் விலை ஒரு கிலோவிற்கு ரூ.3 லட்சம் வரை விற்கப்படுகிறது.
இதன் விலையின் காரணமாக மாம்பழங்கள் திருட்டு அல்லது சேதத்திலிருந்து பாதுகாக்க விவசாயிகள் சிறப்பு ஏற்பாடுகள் செய்வது அவசியமாகும்.
அதேபோல், சில சூழ்நிலைகளில் மாம்பழங்களை கண்காணிக்க தோட்டங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |