உலகின் மிக விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள்.., என்னென்ன தெரியுமா?
உலகிலேயே மிக விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள் என்னென்ன என்பதை நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நாம் ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால், நமது விருப்பத்திற்கும் பட்ஜெட்டுக்கும் ஏற்றவாறு சந்தையில் ஆயிரக்கணக்கான ஆப்ஷன்கள் உள்ளன.
இதில் ஆடம்பர ஸ்மார்ட்போன்கள் என வரும்போது, பெரும்பாலான மக்களின் கவனம் Apple iPhone, Google Pixel மற்றும் Samsung Galaxy Ultra போன்ற பிராண்டுகளுக்கு ஈர்க்கப்படுகிறன. பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரிவில், தரம் மற்றும் சிறந்த அம்சங்களை மக்கள் தேடுகின்றனர்.
Xiaomi Redmi K20 Pro Signature Edition
Xiaomi நிறுவனம் வரும் மாதங்களில் Redmi K20 Pro Signature ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.4,80,000 என எதிர்பார்க்கப்படுகிறது.
இது 6.39 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் உடன் வரலாம். இதில் octa-core செயலி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது 48MP + 13MP + 8MP சென்சார்கள் கொண்ட டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கலாம். இந்த ஸ்மார்ட்போன் 4000mAh பேட்டரி மூலம் இயக்கப்படலாம்.
Lamborghini 88 Tauri
இரண்டாவது விலையுயர்ந்த ஸ்மார்ட்போன் லம்போர்கினி 88 டவுரி (Lamborghini 88 Tauri) ஆகும். இதன் விலை ரூ.3,60,000 என்று சந்தையில் அறிமுகமானது.
இதில், 5 அங்குல திரை, இரட்டை சிம், 3G, 4G மற்றும் Wi-Fi அம்சங்கள் உள்ளது. மேலும், Snapdragon 801 செயலி, 3400mAh பேட்டரி உள்ளது. இதில், 20 எம்பி பின்புற கேமரா மற்றும் 8 எம்பி முன் கேமராவும் உள்ளது.
Huawei Mate 30 RS Porsche Design
மிகவும் விலையுயர்ந்த போன்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் Huawei Mate 30 RS Porsche Design உள்ளது.
இந்த பிரீமியம் ஸ்மார்ட்போன் அதன் சிறந்த வடிவமைப்பு மற்றும் அம்சங்களுக்காக அறியப்படுகிறது. இந்த போனின் விலை சுமார் ரூ.2,14,990 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Huawei Mate X2
நான்காவது இடத்தில் Huawei Mate X2 உள்ளது. இது மடிக்கக்கூடிய கேஜெட் ஆகும். 4500mAh பேட்டரி மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ. 2,04,999 என்று சொல்லப்படுகிறது.
Samsung Galaxy Z Fold 6 Ultra
ஐந்தாவதுஇடத்தில் Samsung Galaxy Z Fold 6 Ultra உள்ளது. இந்த போன் சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.2 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |