ரூ. 9 கோடி மதிப்புள்ள உலகின் விலையுயர்ந்த தேநீர்.., அதன் பெயர் என்ன தெரியுமா?
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் விரும்பி குடிக்கும் பானம் தான் தேநீர்.
பொதுவாக ஒரு தேநீரின் விலை ரூ. 10 முதல் ரூ. 50 வரை இருக்கும். ஆனால் உலகில் ரூ. 9 கோடி மதிப்புள்ள ஒரு தேநீர் இருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது.
அந்தவகையில், ரூ. 9 கோடி மதிப்புள்ள இந்த தேநீரின் பெயர் டா-ஹாங் பாவ் (Da-Hong Pao).
இது சீனாவின் ஃபுஜியான் மாகாணத்தில் உள்ள வூயி மலைப்பகுதியில் விளைகிறது.

மலைப் பாறைகளுக்கு இடையே வளரும் இந்தத் தேயிலைச் செடிகள், அங்குள்ள கனிமச்சத்துகளை முழுமையாக உறிஞ்சுவதால் தனித்துவமான சுவையையும் நறுமணத்தையும் பெறுகின்றன.
இந்த தேயிலைச் செடிகள் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையானவை.
தற்போது உலகில் 6 முதல் 7 செடிகள் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இதன் விலை கோடிகளில் உயர்ந்துள்ளது.
இந்த தேநீருக்கு மண் வாசனையுடன் கூடிய வலுவான சுவையும், லேசான இனிப்புத் தன்மையும் இருக்கும்.

இதன் சுவை நீண்ட நேரம் நாவில் நிலைத்து நிற்கும் என்பதால் இதை பாறை தேநீர் என்றும் அழைக்கிறார்கள்.
2002ஆம் ஆண்டு இந்த தேநீரின் வெறும் 20 கிராம் ரூ. 26.17 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பின்னர் 2006ஆம் ஆண்டு சீன அரசு இந்த தேயிலைச் செடிகளை அறுவடை செய்வதற்கு தடை விதித்தது. இதனால் இதன் மதிப்பு மேலும் உயர்ந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |