உச்சக்கட்ட ஆடம்பரத்தில் வடிவமைக்கப்பட்ட திருமண ஆடைகள்... பெறுமதி எவ்வளவு தெரியுமா?
ஒரு மனிதனின் வாழ்க்கையில் திருமணம் என்பது முக்கியமான நிகழ்வாகும். திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சியக்கபடுவதாக பலர் கூறுவார்கள்.
பலரும் தங்களது திருமணத்தை வெகு விமர்சையான கொண்டாட வேண்டும் எனவும் மற்றவர்களை விட அழகாகவும் தனித்துவமாக இருக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு விடயத்தை பார்த்து பார்த்து செய்வார்கள்.
அதில் முக்கியமாக இருப்பது தான் மணமகள் மற்றும் மணமகனின் ஆடைகள். அப்படி உலகில் சில பிரபலமான நபர்கள் தங்கள் திருமணத்தின் போது ஆடைகளை அவர்களே விருப்பப்படி வடிவமைத்து அணிந்துள்ளனர்.
அந்தவகையில் சில புகழ்பெற்ற நபர்களின் திருமண ஆடைகளின் விலை குறித்தும் இதில் இருக்கும் சிறப்பம்சங்கள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
செரினா வில்லியம்ஸ்
கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல டென்னிஸ் வீரர் செரினா வில்லியம்ஸுக்கும் அலெக்சிஸ் ஓஹானியனுக்கும் திருமணம் நடைபெற்றது. அவரது திருமணத்தின் போது அவர் 3 ஆடைகளை அணிந்துள்ளார். ஆனால் அவர் அணிந்திருந்த முக்கியமான ஆடையின் விலையானது 3.5 மில்லியம் அமெரிக்க டாலர் ஆகும். அதை சாரா பர்டன் என்பவர் வடிவமைத்துள்ளார்.
Image credit: Instagram.com/voguemagazine
இரண்டாம் எலிசெபத் ராணி
கடந்த 1947 ஆம் ஆண்டு இரண்டாம் எலிசெபத் ராணிக்கும் இளவரசர் பிலிப்பிற்கும் திருமணம் நடைபெற்றது. அவருடைய திருமணத்தின் போது விலையுயர்ந்த முத்துக்கள், பவளங்கள் பதிக்கப்பட்ட உடையை ராணி அணிந்துள்ளார். அப்போதைய விலையானது 42,000 அமெரிக்க டாலராகும். இன்றைய மதிப்பில் பார்த்தால் 1.2 மில்லியன் அமெரிக்க டாலராகும். அதை நார்மன் ஹர்ட்னெல் என்பவர் வடிவமைத்துள்ளார்.
விக்டோரியா ஸ்வாரோவ்ஸ்கி
கடந்த 2017 ஆம் ஆண்டு விக்டோரியா ஸ்வாரோவ்ஸ்கிக்கும் வெர்னர் முர்ஸிற்கும் திருமணம் நடைபெற்றது. அவருடைய திருமணத்தின் போது 500,000 படிக கற்கள் பதிக்கப்பட்ட ஆடையை அவர் அணிந்துள்ளார். அதன் விலையானது ஒரு மில்லியன் அமெரிக்க டாலராகும். இவ்வளவு செலவு செய்து திருமணம் செய்தாலும் 2023 ஆம் ஆண்டில் இருவரும் பிரிந்துள்ளனர்.
இஷா அம்பானி பிரமல்
கடந்த 2018 ஆம் ஆண்டு முகேஷ் அம்பானியின் மகளான இஷா அம்பானிக்கும் ஆனந்த் பிரமலுக்கும் திருமணம் நடைபெற்றது. அவருடைய திருமணத்தின் போது அபு ஜானி சந்தீப் கோசலா வடிவமைத்த லெஹங்கா உடையை அணிந்துள்ளார். அதன் விலை மட்டும் சுமார் ரூ.90 கோடியாகும். இது தற்போது நீடா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற திருமண சேலை
கடந்த 2006 ஆம் ஆண்டு அமெரிக்கா கலிஃபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற திருமண உடை தொடர்பான நிகழ்ச்சிக்காக வடிவமைக்கப்பட்ட உடையானது உலகிலேயே விலையுயர்ந்த ஆடை என்ற பெயரை பெற்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது. இந்த உடையில் 150 கேரட் வைரம் பதிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை மாத்திரம் 12 மில்லியன் அமெரிக்க டாலராகும்.
50,000 ஸ்வாராவ்ஸ்கி படிக கற்கள் பதிக்கப்பட்ட திருமண உடை
50,890 ஸ்வாராவ்ஸ்கி படிக கற்கள் பதிக்கப்பட்டு இந்த ஆடையானது அதிக படிக கற்கள் பதிக்கப்பட்ட ஆடை என்ற கின்னஸ் சாதனையை படைத்தது. அதை வடிவமைக்க நான்கு மாதங்களுக்கு மேலாகியுள்ளது. மணப்பெண் அணியும் கையுறை கூட நகைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கிம் கர்தாஷியான்
கடந்த 2014 ஆம் ஆண்டு கேன்யே வெஸ்டுக்கும் கிம் கர்தாஷியானுக்கும் திருமணம் நடைபெற்றது. கைகளால் மாத்திரமே வடிவமைக்கப்பட்ட ஆடையை அவர் அணிந்துள்ளார். 5,00,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள Givenchy கவுனை கிம் அணிந்திருந்தார். என்ன தான் செலவு செய்து திருமணம் செய்தால் அவர்கள் இருவரின் உறவும் 2022 ஆம் ஆண்டே முடிந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |