ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்த திருமணம்: வாயை பிளக்க வைக்கும் செலவு
குஜராத்தில் முன்னெடுக்கப்பட்ட திருமணம் ஒன்று, காலாகாலத்திற்கும் அங்குள்ள மக்களுக்கு மறக்க முடியாத விருந்தாக அமைந்துள்ளது.
மூதாதையர் இல்லமான ரஞ்சித் விலாஸ்
ஜடேஜா குடும்பம் என்பது ராஜ்கோட் பகுதியின் பெரும் கோடீஸ்வரர்கள் மட்டுமின்றி மிக முக்கியமான குடும்பமாகும். இந்த குடும்பத்து வாரிசு ஒருவரின் திருமண விழாவினையே, பல கோடிகளை கொட்டி முன்னெடுத்துள்ளனர்.
இளவரசர் ஜெய்தீப் ஜடேஜா மற்றும் ராஜ்கோட் இளவரசி ஷிவாத்மிகா குமார் ஆகியோரின் திருமணத்தை முன்னிட்டு, குஜராத் மொத்தமும் வளைவுகள் மற்றும் அலங்காரங்களாலும் ஒளிவெள்ளத்திலும் மிதந்தது.
குறித்த திருமணமானது 100 அறைகள் மற்றும் பெரிய புல்வெளியுடன் கூடிய அரச மாளிகையான ஜடேஜா குடும்பத்தின் மூதாதையர் இல்லமான ரஞ்சித் விலாஸில் நடைபெற்றது. இந்த அரண்மனையானது தற்போது ஹொட்டலாக மாற்றியுள்ளனர்.
திருமணத்திற்காக ஜடேஜா குடும்பமானது அனைத்து சடங்குகள் மற்றும் மரபுகளையும் பின்பற்றினர். அத்துடன் திருமண ஊர்வலத்தில் 5,000 நடனக்கலைஞர்களை உட்படுத்தினர்.
திருமணத்திற்கு 25,000 விருந்தினர்களை அழைத்திருந்தனர். ஜடேஜா குடும்பத்தினருக்கான தனிப்பட்ட விமானங்களில் முக்கியமான விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டனர்.
8 கி.மீ தொலைவுக்கு ஊர்வலம்
5,000 நடனக்கலைஞர்களுடன் 8 கி.மீ தொலைவுக்கு ஊர்வலம் நீண்டது. 30 பேர்கள் இளவரசி போன்றே ஜோடிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டனர். இந்த ஊர்வலத்தில் ஒட்டகம் மற்றும் யானைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
யானை மீது தங்க சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த மணமகனும் ஊர்வலத்தில் ஒரு பகுதியாக காணப்பட்டார். மணமகள் அரச குடும்பத்து நகைகளால் அலங்கரிக்கப்பட்டு, பாரம்பரிய முறைப்படி மணமகன் யானை மீது ஊர்வலமாக சென்றார்.
திருமணத்திற்கான செலவு மட்டும் ரூ 150 கோடி என்றே கூறப்படுகிறது. ஆனால் ஜடேஜா குடும்பம் ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு உணவளித்துள்ளனர்.
அத்துடன் சுமார் ரூ 8 கோடி அளவுக்கு நன்கொடையும் அளித்துள்ளனர். இதனால் திருமணத்திற்கு என செலவிடப்பட்ட மொத்த தொகை தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |