நாளுக்கு ரூ.46 லட்சம்... 10 மாதங்களில் 170 கோடி நன்கொடை: யாரிந்த ரோகினி நிலேகனி
இந்தியாவில் நன்கொடை அளிக்கும் பெண் தொழிலதிபர்கள் வரிசையில் 2023ம் ஆண்டில் முதலிடத்தை தக்க வைத்துள்ளார் ரோகினி நிலேகனி.
இதுவரை 170 கோடி
இந்த ஆண்டின் இதுவரையான நன்கொடையாளர்கள் பட்டியலில், டாப் 10 வரிசையில் ஒரே ஒருவர் மட்டுமே பெண் என்பதுடன், 10வது இடத்தில் ரோகினி நிலேகனி இடம்பெற்றுள்ளார்.
64 வயதான ரோகினி நிலேகனி, இந்த ஆண்டில் இதுவரை 170 கோடி அளவுக்கு நன்கொடை அளித்துள்ளார். இவரது கணவரும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனருமான நந்தன் நிலேகனி குறித்த பட்டியலில் 8வது இடத்தில் உள்ளார்.
இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்கள் சமூக நலன் கருதி அதிகமாக நன்கொடைகளை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருபவர் ரோகினி நிலேகனி.
மட்டுமின்றி, இந்தியாவில் நன்கொடை அளிக்கும் பெரும் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு எனவும் ரோகினி விமர்சித்துள்ளார். ரோகினி நிலேகனி நாவலாசிரியராகவே அறியப்படுகிறார் என்றாலும் இலாப நோக்கற்ற கல்வி தொடர்பான பங்களிப்பும் செய்து வருகிறார்.
கோடீஸ்வரர் பட்டியலில்
மட்டுமின்றி சிறார்களுக்கான நூல்களை வெளியிடும் Pratham Books என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். தொழில் ரீதியாக பத்திரிகையாளரான ரோகினி பிரபல நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.
1981ல் நந்தன் நிலேகனி உட்பட 6 மென்பொருள் பொறியாளர்கள் இணைந்து இன்ஃபோசிஸ் துவங்கிய போது, தமது சேமிப்பு தொகையான 10,000 ரூபாயை அதில் முதலீடு செய்துள்ளார் ரோகினி.
அந்த நிறுவனத்தின் அசுர வளர்ச்சி, ரோகினியையும் கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பெற செய்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |