பெரும்பாலான கோடீஸ்வரர்கள் இந்த நாடுகளில் தான் உள்ளனர்! முதலிடம் பிடித்த நாடு எது?
ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பெரும்பாலான கோடீஸ்வரர்கள் உள்ள நாடுகளின் முதல் ஐந்து இடங்களின் பட்டியலை இங்கு பார்ப்போம்.
முதலிடம் யாருக்கு?
உலகில் அதிக கோடீஸ்வரர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில், சுவிட்சர்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. உலக புள்ளியியல் அமைப்பு தயாரித்த அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகையில் 15.5 சதவீதம் பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து 15.3 சதவீத மதிப்பெண்களுடன் ஹொங்ஹொங் இரண்டாவது இடத்திலும், குவைத் மூன்றாவது இடத்திலும் உள்ளன. அறிக்கையின்படி, குவைத் நாட்டவர்களில் 15 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள்.
சிங்கப்பூர் அதன் மக்கள் தொகையில் 12.7 சதவீதம் கோடீஸ்வரர்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
மக்கள்தொகையில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்தைத் தாண்டிய கடைசி நாடு அவுஸ்திரேலியா ஆகும். அவுஸ்திரேலியா மக்கள்தொகையில் 11.2 சதவீதம் பேர் கோடீஸ்வரர்களா ஆவர்.
இந்தியாவில் வெறும் 0.1 சதவீதம்..,
இந்தியாவில் மொத்தம் 7,96,000 கோடீஸ்வரர்கள் இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. ஆனால், இந்திய மக்கள்தொகையில் அவர்கள் வெறும் 0.1 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், அறிக்கையின்படி அமெரிக்காவில் தான் அதிகமான (2,55,80,000) கோடீஸ்வரர்கள் உள்ளனர். இது அமெரிக்க மக்கள்தொகையில் 9.7 சதவீதத்தை குறிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |