மிகவும் சக்தி வாய்ந்த கேம்மிங் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் நிறுவனம்? எத்தனை GB RAM+STORAGE தெரியுமா?
தற்போது இருக்கும் ஸ்மார்ட் போன் உலகில், 4GB-க்கு மேல் சென்றுவிட்டாலே ஓரளவிற்கு நல்ல போன், இது கேம் விளையாட நன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த 4GB-வுடன் சிறந்த புராசசர் சேர்ந்துவிட்டால், அந்த போனை கேமில் அடித்து கொள்ள முடியாது. இந்நிலையில், பிரபல ஸ்மார்ட் போன் நிறுவனமான ZTE, 20 GB RAM கொண்ட முதன்மை ஸ்மார்ட் போனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாம்.
இந்த ஸ்மார்ட் போன் வருகையைப் பற்றி Weibo-வில் சில அதிகாரப்பூர்வ தகவல்கள் வந்துள்ளதாம், ஆனால், அதில் போனின் பெயர், அதன் டிசைன் அமைப்பு போன்ற விவரங்களை அது வெளியிடவில்லை,
அதே சமயம் உலகின் சக்தி வாய்ந்த கேமிங் ஸ்மார்ட் போனாக இது இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளதாம். ZTE-ன் இயக்குனர்களில் ஒருவரான Lu Quan Hao, 1TB சேமிப்பு திறன் கொண்ட ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
இருப்பினும், 20 GB RAM கொண்ட இந்த ஸ்மார்ட் போன் 1TB சேமிப்புத் திறனைக் கொண்டிருக்குமா அல்லது அவை இரண்டும் தனித்தனி மொடல்களாகா இருக்குமா என்பதை அவர் உறுதிப்படுத்தவில்லை.
Weibo-வில் வெளியாகியுள்ள தகவலில், அதைப் பற்றி எந்த ஒரு காலக்கெடுவும் குறிக்கப்படவில்லை. தொழில்துறையின், ஸ்மார்ட் போன் உலகில் முதல் மிகப்பெரிய RAM ஸ்மார்ட் போனைக் கொண்டுவருவதற்கான முயற்சியை மட்டும், இது உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு இந்த 20GBRAM ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படுமா அல்லது அடுத்த ஆண்டு வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்று சொல்ல முடியாது.
ஆனால், இது உருவாகுவது உறுதி. தற்போது வரை அதிகபட்சமாக ஸ்மார்ட் போனில் 18GB RAM வரை கொடுக்கப்படுகிறது.