ஒவ்வொரு துடுப்பாட்ட நிலையிலும் அதிக ஓட்டங்கள்: எட்டா உயரத்தில் இலங்கை, இந்திய ஜாம்பவான்கள்

MS Dhoni Sachin Tendulkar Virat Kohli Sanath Jayasuriya
By Sivaraj Jan 23, 2026 07:13 AM GMT
Report

ஒருநாள் கிரிக்கெட்டில் ஒவ்வொரு துடுப்பாட்ட நிலையிலும் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்களின் பட்டியலை இங்கே காண்போம்.

சச்சின் டெண்டுகல்கர், சனத் ஜெயசூரியா உட்பட துடுப்பாட்ட வரிசையின் ஒவ்வொரு இடத்திலும் ஜாம்பவான்கள் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தியுள்ளனர் என்று பார்ப்போம். 

சச்சின் டெண்டுல்கர் - தொடக்க வீரர் (No.1)

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரராக திகழும் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar), தொடக்க வீரராக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்துள்ளார்.

அவரது நீண்ட கால கிரிக்கெட், நுட்பம் மற்றும் சீரான செயல்பாடு ஆகியவற்றின் மூலம் 15,310 ஓட்டங்கள் குவித்துள்ளார். 

Sachin Tendulkar AFP 

ரஞ்சியில் அர்ஜுன் டெண்டுல்கர் 4 ஓட்டங்களில் அவுட்: 6 விக்கெட்டுகளை அள்ளிய வீரர்..சுருண்ட கோவா

ரஞ்சியில் அர்ஜுன் டெண்டுல்கர் 4 ஓட்டங்களில் அவுட்: 6 விக்கெட்டுகளை அள்ளிய வீரர்..சுருண்ட கோவா

சனத் ஜெயசூரியா - தொடக்க வீரர் (No.2)

இலங்கை ஜாம்பவான் சனத் ஜெயசூரியா (Sanath Jayasuriya) தொடக்க வீரராக 12,740 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்தவர் ஆவார்.

இவரது ஆக்ரோஷமான துடுப்பாட்ட அணுகுமுறை, Powerplay காலகட்டத்தில் ஒருநாள் போட்டிகள் விளையாடப்பட்ட விதத்தையே மாற்றியது.  

Sanath Jayasuriya Reuters/Action Images

விராட் கோஹ்லி (No.3)

இந்திய கிரிக்கெட் அணியில் (ஒருநாள் போட்டி) ரன் மெஷின் என்றழைக்கப்படும் விராட் கோஹ்லி (Virat Kohli), மூன்றாவது துடுப்பாட்ட வரிசையில் 12,676 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

நெருக்கடியான சூழ்நிலைகளில் சதம் விளாசி, பலமுறை இந்திய அணியை காப்பாற்றியுள்ளார் கோஹ்லி. 

Virat Kohli CREIMAS for BCCI  

ராஸ் டெய்லர் (No.4)

நியூசிலாந்தின் முன்னாள் வீரரான ராஸ் டெய்லர் (Ross Taylor), நான்காவது துடுப்பாட்ட வரிசையில் 7,690 ஓட்டங்கள் குவித்தவர் ஆவார்.

நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், சிக்ஸர்களை பறக்கவிட்ட டெய்லர், இந்த வரிசையில் சிறந்த வீரராக விளங்கினார். 

Ross Taylor Getty Images

அர்ஜுனா ரணதுங்கா (No.5)

இலங்கை முன்னாள் வீரரான அர்ஜுனா ரணதுங்கா (Arjuna Ranatunga) தந்திரோபாய ரீதியாக சிறந்த துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் 5வது துடுப்பாட்ட வரிசையில் களமிறங்கி 4,675 ஓட்டங்கள் குவித்துள்ளார். 

Arjuna Ranatunga Clive Mason/Getty Images

எம்.எஸ்.தோனி (No.6)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான எம்.எஸ்.தோனி (MS Dhoni), ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைப்பதில் வல்லவர் ஆவார். இவர் 6வது வரிசையில் 4,164 ஓட்டங்கள் குவித்துள்ளார். 

MS Dhoni JEWEL SAMAD/AFP

கிறிஸ் ஹாரிஸ் (No.7)

நியூசிலாந்தின் முன்னாள் ஆல்ரவுண்டர் வீரர் கிறிஸ் ஹாரிஸ் (Chris Harris). இவர் நம்பகமான கீழ்-நடுவரிசை வீரர் ஆவார். ஹாரிஸ் முக்கியமான நேரங்களை பொறுப்பாக ஆடி 2,130 ஓட்டங்கள் குவித்தார். 

Chris Harris Getty Images

வாஸிம் அக்ரம் (No.8)

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான வாஸிம் அக்ரம் (Wasim Akram), ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய சாதனையாளர் ஆவார். 

அதே சமயம் 8வது வரிசையில் பல சமயங்களில் ஓட்டங்களை சேர்த்து அணிக்கு பலம் சேர்த்துள்ளார். இவர் 1,208 ஓட்டங்கள் எடுத்துள்ளார். 

Wasim Akram Arko Datta/Reuters 

மஷ்ரஃபே மோர்தசா (No.9)

வங்காளதேச அணியின் மூத்த வீரரான மஷ்ரஃபே மோர்தசா (Mashrafe Mortaza), 9வது இடத்தில் 701 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

கீழ்வரிசையில் போராடும் வீரரான மோர்தசா, அணிக்காக பல சமயங்களில் முக்கிய கட்டத்தில் ஓட்டங்களை எடுத்துள்ளார்.

Mashrafe Mortaza Getty Images

வாக்கர் யூனிஸ் (No.10)

பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வாக்கர் யூனிஸ் (Waqar Younis), அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராக இருந்தாலும், ஓரளவு ஓட்டங்களை சேர்க்கக்கூடியவராகவும் இருந்தார். இவர் 10வது வரிசையில் விளையாடி 478 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.  

Waqar Younis Reuters

ட்ரென்ட் போல்ட் (No.11)

நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளரான ட்ரென்ட் போல்ட் (Trent Boult) கடைசி வரிசையில் களமிறங்கினாலும், அவரது பங்களிப்புகளாக ஒவ்வொரு ரன்னும் முக்கியத்துவம் பெற்றது. அவர் 176 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.  

Trent Boult Getty Images

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 



மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

15 Jan, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி

20 Jan, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், சாவகச்சேரி, சுவிஸ், Switzerland

23 Jan, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு, Brampton, Canada

20 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் நவாலி வடக்கு, Jaffna, நவாலி வடக்கு, சென்னை, India, London, United Kingdom

10 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Milton Keynes, United Kingdom

17 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, பூநகரி, அரியாலை, London, United Kingdom

01 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், பேர்லின், Germany

23 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, கோண்டாவில்

25 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ்ப்பாணம், Richmond Hill, Canada, வெள்ளவத்தை

02 Feb, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

20 Jan, 2026
மரண அறிவித்தல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி, Paris, France

22 Jan, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Bochum, Germany

21 Jan, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
மரண அறிவித்தல்

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

17 Jan, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை, பிரான்ஸ், France, Mitcham, United Kingdom

06 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டி, தெல்லிப்பளை, வட்டுக்கோட்டை, கொழும்பு, Toronto, Canada

21 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொந்தக்காரன்குளம், வைரவபுளியங்குளம், வவுனியா

02 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Erlalai, புங்குடுதீவு, கட்டுவன், மட்டக்களப்பு, கனடா, Canada

20 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US