கனடாவிலும் கொரோனாவால் இப்போது அதிகம் பாதிக்கப்படும் வயதினர் யார் தெரியுமா? மிகவும் எச்சரிக்கையா இருங்க
கனடாவில் 20 முதல் 39 வயதிற்குட்பட்டவர்கள் இடையே கொரோனா பரவல் அதிகம் இருப்பதாக தலைமை பொதுச்சுகாதார அதிகாரி தெரேசா டாம் தெரிவித்துள்ளார்.
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் வயதானவர்களிடையே அதிகம் பரவியது. அதன் பின் அந்த வைரஸ் உருமாற்றம் அடைந்து தீவிரமாக பரவி வருகிறது.
குறிப்பாக இப்போது பிரித்தானியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் 10 முதல் 19 வயதினரிடையே அதிகமாக பரவுவதாக கூறப்பட்டது.
இந்நிலையில், தற்போது கனடாவில், 20 முதல் 39 வயதிற்குட்பட்டவர்கள் இடையே கொரோனா பரவல் அதிகம் இருப்பதாக தலைமை பொதுச்சுகாதார அதிகாரி தெரேசா டாம் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை நிலவரப்படி, கனடாவில் புதிதாக, கொரோனாவல் 2,643-பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் மொத்த பாதிப்பு 9,44,962-ஆக அதிகரித்துள்ளது.
இதில் 22,754 பேர் இதுவரை இறந்துள்ளனர் மற்றும் 8,85,604 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். தற்போது, 36,310 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து தெரேசா டாம் கூறுகையில், கொரோனா வைரஸ் குறிப்பாக, இப்போது இளம் வயதுடையவர்களுக்கிடையே அதிகம் பரவி வருகின்றது.
இதற்கு முக்கிய காரணம் சமூக இடைவெளியே சரியாக கடைப்பிடிக்காததே காரணமாகும். அதிலும் புதியவகை கரோனா தொற்றான SARS-CoV-2 வைரஸ் பரவுவது மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, பொதுமக்கள் மேலும் விழிப்புடன் செயல்பட வேண்டும். பொதுச் சுகாதார நடவடிக்கைகள் மற்றும் தனிப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதே தொற்று அதிகரிக்காமல் தடுக்கமுடியும் என்று எச்சரித்துள்ளார்.