ஐஐடியில் ஒரே மேடையில் மகன் உடன் பட்டம் பெற்ற 42 வயது தாய்
22 வயது மகனுடன் 42 வயது தாய் ஐஐடியில் ஒரே மேடையில் பட்டம் பெற்று கற்றலுக்கு வயது தடையில்லை என நிரூபித்துள்ளார்.
ஐஐடியில் ஒரே மேடையில் பட்டம் பெற்ற தாய் மகன்
குஜராத்தை சேர்ந்த ஜிகிஷா டெய்லர், அங்குள்ள பொறியியல் கல்லூரியில் 16 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றிவிட்டு, குடும்ப சூழ்நிலை காரணமாக 2019 ஆம் ஆண்டில் வேலையை விட்டுள்ளார்.

அப்போது கோரோனோ காலகட்டம் என்பதால் ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்கள் இணையவழி பட்டப்டிப்பை வழங்க தொடங்கியது.
அப்போது ஜிகிஷா டெய்லரின் மூத்த மகனான ஆதித்யா கபாடியா தனது 18 வது வயதில் சென்னை ஐ.ஐ.டி.யின் ஆன்லைன் தரவு அறிவியல் (Data Science) படிப்பில் சேர்ந்துள்ளார்.
மகன் படிக்கும் பாடங்களை கவனித்த ஜிகிஷாவுக்கு அந்தப் படிப்பின் மீது ஆர்வம் ஏற்பட, 2022 ஆம் ஆண்டில் அவரும் அதே படிப்பில் சேர்ந்துள்ளார்.
அதிகாலை 4:30 மணிக்கு எழுந்து, காலை ஏழு மணிக்குள் படிப்பை முடித்துவிட்டு, அதன்பின் வீட்டு வேலைகளை பார்ப்பார். மதியத்திற்கு மேல் மீண்டும் படிப்பில் கவனம் செலுத்துவார்.
சென்னை ஐ.ஐ.டி. நடத்திய நேரலை சந்தேக நிவர்த்தி வகுப்புகள், மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் அவருக்கு பெரிய ஆதரவாக இருந்துள்ளது.
இந்த வயதில் ஏன் படிக்கிறாய்? வேலைக்குப் போக வேண்டுமா?" என்று பலரும் கேட்டபோதும், அவரது கணவர் மாமியார், மாமனார் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
யார் 'S' Grade பெறுவது? யார் 'A' Grade வாங்குவது? என மகன் மற்றும் தாய் போட்டி போட்டு படித்துள்ளனர். மகன் மற்றும் தாய் ஒரே படத்தை படிக்கும் போது ஒருவருக்கொருவர் உதவி சந்தேகங்களை நிவர்த்தி செய்துள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 21 வயது மகனும் 45 வயது தாயும் ஒரே மேடையில் பட்டம் பெற்றுள்ளனர்.
2024 ஆம் ஆண்டில் பட்டத்தை முடித்த ஆதித்யா, Syngenta நிறுவனத்தில் டேட்டா சயின்ஸ் பயிற்சியாளராக பணியாற்றி, பின்னர் வேலையில் சேர்ந்துள்ளார்.
ஜிகிஷா பட்டம் பெற்றுவிட்டாலும், தற்போது 12 ஆம் வகுப்பு படிக்கும் இளைய மகனின் கல்வியில் கவனம் செலுத்துவதற்காக வேலை தேடுவதை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளார்.
எதிர்காலத்தில் மீண்டும் கற்பித்தல் பணியில் ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ள ஜிகிஷா "இப்போது எனக்கு புதிய கல்விப் பின்னணி கிடைத்துள்ளது. அதனால் முன்பைவிட இன்னும் சிறப்பாக கற்பிக்க முடியும் என்று நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய ஆதித்யா, "அம்மா எப்படி கடினமாக உழைத்தார் என்பதைப் பார்த்து நானும் ஊக்கமடைந்தேன். எப்போதும் கற்றுக்கொண்டே இருக்கும் என் அம்மாவின் இன்னொரு முகத்தை நான் பார்த்தேன்," என்று தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |