8 ஆண்டுகளுக்குமுன் பிரான்சுக்கு புறப்பட்ட தாயும் மகனும் மாயம்: நீடிக்கும் மர்மம்
பிரித்தானியாவிலிருந்து எட்டு ஆண்டுகளுக்குமுன் பிரான்ஸ் செல்லும் படகில் ஏறிய ஒரு தாயும் மகனும் இதுவரை எங்கிருக்கிறார்கள் என யாருக்கும் தெரியவில்லை.
ஒரு அக்டோபர் மாதத்தில் அவர்கள் மாயமான நிலையில், அவர்கள் காணாமல்போய் எட்டு ஆண்டுகள் முடிவடைந்துள்ளதை நினைவுகூரும் அவர்களுடைய குடும்பத்தினர், இன்னமும் அவர்கள் நினைவாக வாடுவதாக தெரிவித்துள்ளனர்.
எட்டு ஆண்டுகளுக்குமுன் மாயமான தாயும் மகனும்
Credit: North News and Pictures
இங்கிலாந்திலுள்ள Middlesbrough என்னுமிடத்தைச் சேர்ந்த சாரா (Sarah Sisson, 37) என்னும் பெண்ணும், அவரது மகனான ஹார்வே (Harvey Belshaw, 12) என்னும் சிறுவனும், 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8ஆம் திகதி, Doverஇலிருந்து பிரான்சிலுள்ள Calais துறைமுகத்துக்குச் செல்லும் படகொன்றில் தங்கள் காருடன் பயணித்தார்கள்.
அதற்குப் பின் அவர்களைக் குறித்த எந்த தகவலும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு கிடைக்கவில்லை. அவர்கள் தங்கள் குடும்பத்தினரை தொடர்புகொள்ளவும் இல்லை.
இந்த மாதத்துடன் அவர்கள் காணாமல்போய் எட்டு ஆண்டுகள் ஆகின்றன.
இந்நிலையில், சாராவின் சகோதரரான டேவிட், ஒவ்வொரு நாளும் தாங்கள் அவர்களைக் குறித்து எண்ணிக்கொண்டிருப்பதாகவும், குறிப்பாக பிள்ளை ஹார்வே வளர்ந்து வாலிபனாக ஆவதைக் காணும் வாய்ப்பு தங்களுக்குக் கிடைக்கவில்லையே என வருந்துவதாகவும் தெரிவித்தார்.
வழக்கு விசாரணையை மேற்கொண்டுவரும் அதிகாரியான Matt Hollingsworth என்பவரும், தொடர்ந்து தாங்கள் சாராவையும் ஹார்வேயையும் தேடிவருவதாகவும், யாருக்காவது அவர்களைக் குறித்து ஏதாவது தகவல் கிடைத்தால் உடனடியாக தங்களுக்கு தகவல் கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |