தாயின் கொடுரச் செயல்! 2வயது குழந்தைக்கு ஏற்பட்ட சோகம்.. நெஞ்சை பதை பதைக்கவைக்கும் சம்பவம்
விழுப்புரம் மாவட்டத்தில் பெற்ற குழந்தையை வீடு முழுவதும் துரத்தி தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி பகுதியை சேர்ந்தவர் வடிவழகன். இவரின் மனைவி துளசி. சில நாட்களாகவே இருவருக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. அந்த வெறுப்பின் காரணமாக துளசி தனது 2 வயது குழந்தையை சரமாரியாக அடித்து துன்புறுத்தியுள்ளார்.
அதுமட்டும் இல்லாமல் குழந்தையை சித்ரவதை செய்வதை வீடியோவாக எடுத்து வைத்துள்ளார். துளசியின் கொடூர முகம் கணவனுக்கு தெரியவர அவருடன் சண்டைபோட்டு பிறந்த வீட்டுக்கு அடித்து துரத்திவிட்டார்.
துளசியின் செல்போன் அவரது கணவரிடம் இருந்த நிலையில் அவரின் உறவினர்கள் சிலர் செல்போனை ஆராய்ந்து பார்த்த பொழுது மனதை பதைபதைக்கும் அந்த வீடியோ காட்சிகள் பதிவாகியிருந்ததை அறிந்தனர்.
இதையடுத்து அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோ மூலம் கிடைத்த சாட்சிகள் வைத்து சத்தியமங்கலம் காவல்துறை அதிகாரிகள் துளசிமீது வழக்கு பதிவு செய்து அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.