என் தாய் டயானாவை மோசமாக விமர்சித்தார்கள்: இளவரசர் ஹரி நீதிமன்றத்தில் சாட்சியம்
பிரித்தானிய இளவரசர் ஹரிக்கும் தி மிரர் ஊடகக் குழுமத்துக்கும் இடையிலான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில், ஊடகங்களால் தானும் தன் குடும்பமும் எவ்வாறெல்லாம் பாதிக்கப்பட்டோம் என்பது குறித்து இன்று சாட்சியமளித்தார் ஹரி.
இளவரசி டயானாவை மன நோயாளி என்றார்கள்
தன் தாய் இளவரசி டயானாவைக் குறித்து ஹரி அளித்த சாட்சியத்தில், தன் தாயைப் பற்றிக் குறிப்பிடும்போதெல்லாம், அவர் paranoia என்னும் மன நல பாதிப்பு கொண்டவர் என்றே எல்லோரும் குறிப்பிடுவதை நான் கேட்டிருக்கிறேன் என்றார் ஹரி.
அதாவது, paranoia பிரச்சினை கொண்டவர்கள், இல்லாததை இருப்பதுபோல நினைத்துக்கொண்டு, தன்னை யாரோ கவனித்துக்கொண்டே இருக்கிறார்கள், அல்லது தனக்கு எதிராக யாரோ ஏதோ செய்துகொண்டே இருக்கிறார்கள் என்று எண்ணுவதால் மற்றவர்கள் மீது சந்தேகத்துடனேயே இருப்பார்கள்.
ஆனால், என் தாய் மன நல பாதிப்பு கொண்டவரல்ல, உண்மையாகவே அவருக்குப் பின்னால் நடப்பதைக் குறித்துத்தான் அவர் பயந்துகொண்டே இருந்தார். நானும் அதே நிலையில் இருந்திருக்கிறேன் என்றார் ஹரி.
பிறப்பையே கேள்விக்குறியாக்கினார்கள்
பல பத்திரிகைகள், ஜேம்ஸ் ஹெவிட் என்பவர்தான் என் உண்மையான தந்தை என்று எழுதின என்று கூறிய ஹரி, நான் பிறந்த பிறகுதான் என் தாய் டயானா ஜேம்ஸையே சந்தித்தார் என்றார்.
விடயம் என்னவென்றால், பத்திரிகைகளில் அந்த விடயம் வெளியானபோது, நான் பிறந்த பிறகுதான் என் தாய்க்கும் ஜேம்ஸுக்கும் பழக்கம் ஏற்பட்டது என்ற உண்மை எனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார் ஹரி.
ஆக மொத்தத்தில், தன் குடும்பம், தன் நண்பர்கள், தன் காதல் என எல்லா விடயத்திலும் மூக்கை நுழைத்து தனக்கு ஊடகங்கள் மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாக, தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார் ஹரி.