உயிரிழந்த 15 வயது மகன்! துக்கம் தாளாமல் தாய் மரணம்..சோக சம்பவம்
தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் மகன் உயிரிழந்த துக்கம் தாங்காமல் தாயும் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் ஜே.ஜே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி.
இவருடைய இரு பிள்ளைகள் ஜெய்கணேஷ், தருண். 15 வயதான ஜெய்கணேஷ் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென தவறி விழுந்ததில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் மயக்கமடைந்த ஜெய்கணேஷை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதன் பின்னர் அவரது உடல் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
தனது மகனின் உடலைப் பார்த்து தாயார் சாந்தி கதறி அழுதுள்ளார். இதில் மயக்கமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
தாய்-மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.