அம்மாவுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த இரு மகன்கள்: மூவருமே உயிரிழந்த சோகம்
இந்திய மாநிலம் கர்நாடகாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் தாய், மகன்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
மூடுபனியால் விபத்து
கர்நாடகாவின் துமகுருவில் முகமது சாஹில் தனது தாய் மற்றும் சகோதரருடன் இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளார்.
அவர்களது வாகனம் கொரடகெரேவில் உள்ள ஓபலாபுரா கேட் அருகே சென்றபோது டிராக்டர் மீது மோதியுள்ளது.
மூடுபனி காரணமாக முன்னே சென்ற டிராக்டர் தெரியாததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் தாய் மும்தாஜ் (38), சகோதரர் முகமது ஆசிப் (12) ஆகியோருடன் சேர்ந்து முகமது சாஹிலும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
டிராக்டர் சாரதி
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து மூவரின் உடல்களையும் கைப்பற்றினர்.
மேலும் விசாரணைக்காக டிராக்டர் சாரதியை காவலில் எடுத்த பொலிஸார், அதிகாலை நேரங்களில் நெடுஞ்சாலையில் வாகனங்களை மெதுவாக இயக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
சாலை விபத்தில் தாய், மகன்கள் என ஒரே குடும்பத்தை மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |