தேநீர் போட்டுத் தராத மருமகள்.., கழுத்தை நெரித்து கொலை செய்த மாமியார்
தேநீர் தயாரித்து தராத மருமகளை கழுத்தை நெரித்து மாமியார் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருமகள் கொலை
இந்திய மாநிலமான தெலங்கானா, ஹைதராபாத்தில் உள்ள விகாரபாத் மாவட்டம் மோமின்பேட்டையைச் சேர்ந்தவர் அஜ்மீரா பேகம் (28). இவருக்கு கடந்த 2015 -ம் ஆண்டு முகமது அப்பாஸ் என்ற ஆட்டோ ஓட்டுநருடன் திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இவர்களுடன் அப்பாஸின் தாய் ஃபர்சானா பேகம்(53) வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 15 நாட்களாக மாமியார் மற்றும் மருமகள் இடையே கருத்து வேறுபாடு வந்து அடிக்கடி பிரச்னை வந்துள்ளது. இதில், நேற்று தனக்கு தேநீர் தயாரித்து தருமாறு தனது மருமகள் அஜ்மீராவிடம் மாமியார் கேட்டுள்ளார்.
அப்போது, தேநீர் போட்டுத் தரமுடியாது என்று அஜ்மீரா கூறவே இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த நேரம் தேநீர் வேண்டுமென்று மாமியார் அடம்பிடித்ததாக கூறப்படுகிறது.
பின்னர், உங்களுக்கு வேலை செய்ய முடியாது என்று கூறிவிட்டு அஜ்மீரா சமையலறைக்குப் போய் விட்டார். இதனால், ஆத்திரமடைந்த ஃபர்சானா, அஜ்மீரா பேகத்தின் பின்னால் சென்று தாவணியால் அவரது கழுத்தை நெரித்துள்ளார். இதனால், மூச்சுத்திணறி அஜ்மீரா உயிரிழந்துள்ளார்.
இதுதொடர்பாக, தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அஜ்மீரா பேகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், ஃபர்சானா பேகத்தை கைது செய்த பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |