மகன் பாடசாலை செல்லாததால் தாய் எடுத்த அதிர்ச்சி முடிவு
தமிழக மாவட்டம் தூத்துக்குடியில் பெண்ணொருவர், தனது மகன் பாடசாலை செல்லாததால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதிர்ச்சி முடிவு
தூத்துக்குடி மாவட்டம் அக்கநாயக்கன்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த ஜோதிமணி என்பவரின் மனைவி இசக்கியம்மாள் (35). இவர்களின் மகன் அதே ஊரில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் கூலி வேலை பார்த்து வந்த இசக்கியம்மாள், கடந்த 23ஆம் திகதி பூச்சிக் கொல்லி மருந்தை குடித்துள்ளார்.
இதனை அறிந்த அக்கப்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
விசாரணை
ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த பொலிஸார் இசக்கியம்மாளின் உடலைக் கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், தனது மகன் சரியாக பாடசாலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த இசக்கியம்மாள் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |