பாத்ரூமில் இளம்பெண் செய்த கொடூர செயல்! பிறந்து சில நிமிடத்திலே குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம்.. பதறவைக்கும் பின்னணி
கேரளாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர், பிறந்த குழந்தையை பாத்ரூமில் வைத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாவட்டத்தில் உள்ள வயநாடு பகுதியில் 20 வயது இளம்பெண் தனது தாயுடன் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சில மாதங்களாகவே அந்த பெண்ணை பின் தொடர்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் அப்பெண்ணை வழிமறைத்து வலுக்கட்டாயமாக பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். இதை விளைவாக அந்த பெண் கர்ப்பம் அடைந்துள்ளதையடுத்து கருவை கலைக்க பல முயற்சி எடுத்துள்ளார்.
ஆனால் அவை எதுவும் கைகொடுக்கவில்லை என்பதால் வேறு வழியின்றி வயிற்றில் குழந்தையை சுமந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு கடந்த வாரம் பிரசவவலி ஏற்பட்டுள்ளது.
இதனால் அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அவர் பாத்ரூமுக்கு சென்ற பொழுது குழந்தை பிறந்துள்ளது. தகாத உறவில் பிறந்த குழந்தையை வளர்க்க பிடிக்காததால் பிறந்து சில நிமிடங்கள் ஆன குழந்தையின் முகத்தில் தண்ணீரை ஊற்றி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இதையடுத்து பொலிஸார் அந்த பெண்ணை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.