பெற்ற மகள்களை கொலை செய்த தாய்: தண்டனை அறிவிப்பு
தான் பெற்ற மகள்களையே கொடூரமாக கொலை செய்த வழக்கில், பெண்ணொருவருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பெற்ற மகள்களை கொலை செய்த தாய்
2021ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், சுவிட்சர்லாந்தின் Solothurn மாகாணத்திலுள்ள Gerlafingen என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த ஒரு 41 வயது பெண், 7 மற்றும் 8 வயதுடைய தனது இரண்டு மகள்களை கொலை செய்தார்.
தம்பதியர் பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்துவந்த நிலையில், அந்தப் பெண்ணின் கணவர் விவாகரத்துக் கோரி விண்ணப்பித்திருந்தார்.
இந்நிலையில், பிள்ளைகளைக் கொலை செய்தது மற்றும் கணவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்தப் பெண்ணுக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
அத்துடன், அந்தப் பெண்ணுக்கு சிறையில் மன நல சிகிச்சையும் வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |