கோவையில் ஒரு கொடூரம்.., கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ 4 வயது குழந்தையை கொன்ற தாய்
கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக 4 வயது குழந்தையை தாய் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
குழந்தையை கொன்ற தாய்
தமிழக மாவட்டமான கோவையில், குழந்தையை அழைத்து வர வேண்டாம் என்று கள்ளக்காதலன் கூறியதால் 4 வயது குழந்தையை தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிங்காநல்லூரை அடுத்த இருகூர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் ரகுபதி(35) மற்றும் தமிழரசி(30). இவர்களுக்கு 4 வயதில் அபர்ணாஸ்ரீ என்ற குழந்தை இருந்தது. இதில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் குழந்தையுடன் தமிழரசி தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், தனது வருமானத்திற்காக கட்டிட வேலைக்கு சித்தலாக தமிழரசி சென்று வந்துள்ளார். அங்கு அவருக்கு வசந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று குழந்தை அபர்ணாஸ்ரீக்கு உடல்நிலை சரியில்லாததால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால், அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதில், குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, தமிழரசியிடம் பொலிஸார் விசாரணை செய்த போது முரணாக பதில் அளித்துள்ளார்.
பின்னர், கோவை மாநகர கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து தமிழரசியை விசாரித்த போது குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். அதன்பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து பொலிஸார் கூறுகையில், "குழந்தையை அழைத்து வர வேண்டாம் என்று கள்ளக்காதலன் கூறியதால் குழந்தையை கொலை செய்ய வேண்டும் என்று தமிழரசி முடிவு செய்துள்ளார்.
இதனால், குழந்தை விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்த போது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அப்போது தான் குழந்தை உயிரிழந்தது.
ஆனால், குழந்தை மயங்கிவிட்டதாக அவர் நாடகமாடியுள்ளார். இந்த கொலையில் அவருடைய கள்ளக்காதலனுக்கு தொடர்பு இருக்கிறதா என்று விசாரித்து வருகிறோம்" என்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |