பிரித்தானியாவில் 18 மாத குழந்தையை துன்புறுத்தி கொலை செய்த தாய்: எதிர்பார்க்கப்படும் ஆயுள் தண்டனை
பிரித்தானியாவில் 18 மாத குழந்தையை பெற்ற தாயே முன்னாள் துணைவருடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை ஆல்ஃபி பிலிப்ஸ்
பிரித்தானியாவின் கென்ட் பகுதியில் உள்ள ஹெர்ன்ஹில்லில் 18 மாத குழந்தை ஆல்ஃபி பிலிப்ஸ்(Alfie Phillips) இரவு முழுவதும் தாக்கப்பட்டதில் கிட்டத்தட்ட உடலில் உருவான 70 காயங்களால் உயிரிழந்துள்ளான்.
மேலும் பரிசோதனையில் 8 மாத குழந்தை ஆல்ஃபி பிலிப்ஸ் உடலில் விலா எலும்புகள், கைகள் மற்றும் கால்கள் உடைந்து இருந்ததுடன், குழந்தையின் உடலில் போதைப்பொருள் தடயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Pic: CPS
இதையடுத்து இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிறுவனின் தாய் சியான் ஹெட்ஜஸ்(27) மற்றும் அவரது முன்னாள் துணைவர் ஜாக் பென்ஹாம்(35) பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளது.
ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்ப்பு
இந்நிலையில் 2020ம் ஆண்டு நவம்பர் 27 மற்றும் 28ம் திகதிகளில் நடந்த குழந்தை ஆல்ஃபி பிலிப்ஸ் கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணை தற்போது நீதிமன்றத்தில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தாய் சியான் ஹெட்ஜஸ் மற்றும் முன்னாள் துணைவர் ஜாக் பென்ஹாம் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கறிஞர் ஜெனிபர் நைட் ஜூரிகளிடம் முன் வைக்கும் வாதத்தில், குழந்தை ஆல்ஃபி ஒன்று மேற்பட்ட தருணங்களில் இது போன்று தாக்கப்பட்டுள்ளார். இறுதியில் 2020 நவம்பர் 27 மற்றும் 28ம் திகதிகளில் நடந்த தாக்குதலில் குழந்தை ஆல்ஃபி கொல்லப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
Pic: Kent Police
இதற்கிடையில் அவரது குழந்தை ஆல்ஃபி தந்தை சாம், ஆல்ஃபி மிகச் சிறந்த குழந்தை மற்றும் தங்கம் போன்ற நல்ல குழந்தை என பாராட்டியுள்ளார்.
மேலும் ஆல்ஃபி உயிரிழப்பதற்கு முன்பு, தாய் சியான் ஹெட்ஜஸ் மற்றும் முன்னாள் துணைவர் ஜாக் பென்ஹாம் நன்றாக குடித்து இருந்ததாகவும், அன்றைய நாள் மிகவும் சாதாரண நாளாக இருப்பதாகவும் தெரிவித்து இருந்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தாய் சியான் ஹெட்ஜஸ் மற்றும் முன்னாள் துணைவர் ஜாக் பென்ஹாம் இருவரும் குழந்தை ஆல்ஃபி கொலை தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளும் மறுப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |