பெற்ற மகளை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்ட தாய்
இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தில், பெண்ணொருவர் தான் பெற்ற மகளை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்ட பயங்கரம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
பெற்ற மகளை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்ட தாய்
செவ்வாய்க்கிழமை மாலை, மத்தியப்பிரதேசத்திலுள்ள நர்மதாபுரம் ரயில் நிலையத்தில், வெகுநேரமாக பெண்ணொருவர் தன் மகளுடன் காத்திருப்பதை பலரும் கவனித்துள்ளார்கள்.

இந்நிலையில், சுமார் மூன்று மணி நேரத்துக்குப் பின், மாலை 7.40 மணியளவில் ரயில் ஒன்று வேகமாக வர, திடீரென அந்தச் சிறுமியை ரயில் முன் தள்ளிவிட்டுள்ளார் அந்தப் பெண்.
அங்கு நின்ற பயணிகள் பதற, அவளைக் காப்பாற்றவேண்டாம், காப்பாற்றவேண்டாம் என கூறிக்கொண்டே இருந்தாராம் அந்தப் பெண்.
அந்த 8 வயது சிறுமி, ரயில் தண்டவாளத்துக்கும் பிளாட்பாரத்துக்கும் நடுவே விழுந்துள்ளாள்.
படுகாயமடைந்துள்ள அவள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், அவளது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அந்தப் பெண்ணின் கணவரான அரசு ஊழியர் சமீபத்தில் மரணமடைந்த நிலையில், அவரது வேலை அந்தப் பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளதாம்.
அவரும் அந்த சிறுமியும் மட்டும் தனியாக வாழ்ந்துவந்த நிலையில், எதனால் அவர் மகளை ரயில் முன் தள்ளிவிட்டார் என்பது தெரியவில்லை.
இதற்கிடையில், முதல் கட்ட விசாரணையில், அந்தப் பெண்ணுக்கு மன நல பாதிப்பு இருக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |