மன்னர் சார்லஸ்தான் உன் தந்தை என தன் தாய் மரணப்படுக்கையில் கூறியதாக தெரிவிக்கும் நபர்
தன் தாய் மரணப்படுக்கையில் இருக்கும்போது, மன்னர் சார்லஸ்தான் உன் தந்தை. நீ சார்லஸ் கமீலா தம்பதியரின் மகன் என கூறியதாக சமூக ஊடகம் ஒன்றில் தெரிவித்துள்ளார் அவுஸ்திரேலியர் ஒருவர்.
மன்னர் சார்லசின் மகன் எனக்கூறும் நபர்
சைமன் சார்லஸ் (Simon Charles Dorante-Day) என்பவர், தான் மன்னர் சார்லசுக்கும் கமீலாவுக்கும் பிறந்த மகன் என்னும் ரீதியில் தொடர்ந்து சமூக ஊடகங்களில் செய்தி வெளியிட்டுவருகிறார்.
தன் தாய் மரணப்படுக்கையில் இருக்கும்போது, தன்னிடம் இந்த உண்மையைக் கூறியதாக தெரிவிக்கிறார் சைமன்.
சார்லசின் உண்மையான மகன் யார்?
தனது முகம் சார்லசின் முகத்தைப் போலவே இருப்பதாகக் கூறும் சைமன், ஆனால், இளவரசர் வில்லியம் முகமோ, ஹரி முகமோ அப்படி இல்லை என்கிறார்.
ஆகவே, சார்லசின் உண்மையான மகன் யார் என்பதைக் கண்டறிவதற்காக, சார்லஸ், வில்லியம் ஹரி மற்றும் தான் ஆகிய நான்குபேரும் மருத்துவப் பரிசோதனை செய்யவேண்டும் என்று கூறியுள்ளார் சைமன்.
இத்தனை ஆண்டுகளாக பிரித்தானிய ராஜ குடும்பம் செய்து வந்த ஏமாற்றுவேலைகளை நிரூபிப்பதற்காக மன்னர் சார்லஸ், இளவரசர்கள் வில்லியம், ஹரி மற்றும் தான் இணைந்து அந்த மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படவேண்டும் என்று கோரியுள்ளார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |