பிறந்த பச்சிளம் குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்கு விற்ற தாய்
பிறந்த பச்சிளம் குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்கு விற்ற தாயின் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையை விற்ற தாய்
இந்திய மாநிலமான அசாமில், 22 வயது பெண் ஒருவருக்கு சிவசாகர் சிவில் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.
ஆனால், இந்த பெண்ணிற்கு இன்னும் திருமணமாகவில்லை. தகாத உறவின் மூலம் இந்த குழந்தை பிறந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.
இதனால், பிறந்த குழந்தையை இளம்பெண்ணும் அவரின் தாயாரும் விற்று விடலாம் என்று முடிவு செய்தனர். ஆனால், இந்த தகவல் குழந்தைகள் நலக்குழு மருத்துவமனைக்கு தெரியவந்தது.
பின்னர், அந்த பெண்ணிற்கும் அவரது தாயாருக்கும் குழந்தையை விற்க வேண்டாம் என அறிவுரைகள் வழங்கப்பட்டன.
ஆனால், அவர்கள் கூறியதையும் மீறி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவதற்கு முன்பாகவே ரூ.50 ஆயிரத்திற்கு குழந்தையை விற்றுள்ளனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் குழந்தையை விற்ற இளம்பெண், அவரது தாயார் மற்றும் அவர்களுக்கு உதவிய பெண் ஆஷா பணியாளர் ஒருவர் என 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும், குழந்தையை தேடி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |