புற்றுநோயால் உயிரிழந்த மகன்: வேதனையை வெளிப்படுத்திய தாய்..சரணடைந்த 14 வயது சிறுவன்
Mother shares sad note for conventry fan: கோவென்ட்ரி ரசிகர் ஒருவர், தனது மகனின் புகைப்படத்தை பயன்படுத்தியதற்கு பிராட்லியின் தாய் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
புற்றுநோயால் உயிரிழந்த பிராட்லி லோவரியின் தாய் ஜெம்மா, தன் மகனின் புகைப்படத்தை கோவென்ட்ரி ரசிகர் ஒருவர் பயன்படுத்தி எதிரணி ஆதரவாளர்களை கேலி செய்ததாக வேதனை தெரிவித்துள்ளார்.
அரிதான குழந்தைப் பருவப் புற்றுநோய்
2017-ஆம் ஆண்டு பிராட்லி லோவரி என்ற 6வது சிறுவன், அரிதான குழந்தைப் பருவப் புற்றுநோயால் துயரமான முறையில் உயிரிழந்தார்.
இந்த நிலையில், சண்டர்லாந்து - கோவென்ட்ரி அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியில் பிராட்லியின் புகைப்படத்தை ஆதரவாளர் கையில் ஏந்தியிருந்தார்.
கோவென்ட்ரியின் ரசிகரான அவர் எதிரணி ஆதரவாளர்களை கேலி செய்ய புன்னகைப்பதும், அந்தப் புகைப்படத்தை சுட்டிக்காட்டி ஏளனமாக சிரிப்பதும் காணப்பட்டது.
சண்டர்லாந்து ஆதரவாளர்களைக் கேலி செய்ததாகத் தோன்றியதைத் தொடர்ந்து, பிராட்லி லோவரியின் தாய் ஜெம்மா மனதை உருக்கும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில், 'என் அழகான மகன் வெறுப்புடன் அல்ல, அன்புடன் நினைவுகூரப்படத் தகுதியானவன். ரசிகர் ஒருவர் பிராட்லியின் புகைப்படத்தைப் பயன்படுத்தி கேலி செய்தார். பிராட்லியின் அம்மாவாக, இது என் இதயத்தை நொறுக்குகிறது.

குறிப்பாக அது எனக்கு மிகவும் பிடித்த அவனது புகைப்படங்களில் ஒன்று என்பதால்; அந்தப் புன்னகையைப் பாருங்கள். இவ்வளவு கொடூரமான முறையில் பயன்படுத்துவதைப் பார்க்கும்போது என் இதயம் வலிக்கிறது' என தெரிவித்துள்ளார்.
சரணடைந்த சிறுவன்
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு பதின்ம வயது சிறுவன் அதிகாரிகளிடம் சரணடைந்ததை உறுதிப்படுத்திய வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறை ஒரு அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில், "சண்டர்லேண்ட் அணிக்கு எதிரான கோவென்ட்ரி சிட்டியின் பிரீமியர் லீக் போட்டியின்போது நடந்த ஒரு சம்பவம் குறித்த காணொளி சமூக ஊடங்கங்களில் பரவுவது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது.
இது குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. 14 வயது சிறுவன் ஒருவன் தானாக முன்வந்து அதிகாரிகளிடம் சரணடைந்துள்ளான்; அவனிடம் உரிய நேரத்தில் விசாரணை நடத்தப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
