பிணவறையில் மகளை அடையாளம் காணத் திணறிய தாய்: தாக்கப்பட்டதால் மாறியிருந்த முகம்
கொல்லப்பட்டு பிணவறையில் வைக்கப்பட்டிருந்த தன் மகளை அடையாளம் காணத் திணறினார் அந்தத் தாய். காரணம், தாக்கப்பட்டதால், அந்த அளவுக்கு அந்த குழந்தையின் முகம் மாறியிருந்தது.
சித்திக் கொடுமை
மாற்றந்தாய்கள் பிள்ளைகளைக் கொடுமைப்படுத்துவதைக் குறித்து பழைய காலங்களில் பேசப்பட்டதுண்டு. ஆனால், அது இன்னமும் தொடர்கிறது, அதுவும், நாகரீகம் வளர்ந்து, மக்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வாழ்ந்துவரும் நிலையிலும், அது தொடர்வதை செய்திகள் மூலம் அறிந்துகொள்கிறோம்.
அவ்வகையில், சித்தியின் கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த குழந்தை ஒருத்தியை அடையாளம் காண பொலிசார் அவளைப் பெற்ற தாயை அழைத்தபோது, அந்தக் குழந்தையை அடையாளம் காணத் திணறினார் அந்தத் தாய்.
காரணம், அடிவாங்கியே அவளது முகம் மாறிப்போயிருந்தது.
பெற்றோர் பிரிவதால் பிள்ளைகள் சந்திக்கும் பிரச்சினைகள்
தங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுவதால், தம்பதியர் பிரிகிறார்கள், வேறு திருமணமும் செய்து தங்கள் வாழ்வைத் தொடர்கிறார்கள். ஆனால், அடுத்த பிரச்சினை பிள்ளைகளை யார் கவனித்துக்கொள்வது என்பது.
பிள்ளை எனக்குத்தான் வேண்டும் என பெற்றோர் சண்டை போட, அந்தப் பிள்ளைகளுக்கு மாற்றாந்தாயாக, அந்த பிள்ளைகளின் தாய்க்கு கணவனாக வருபவர்களோ, அந்தக் குழந்தைகளை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டுவது பல இடங்களில் நிகழ்ந்துள்ளது.
ஆக, அந்தப் பிள்ளைகள் பெற்றோருடைய பிரிவால் பாதிக்கப்படுவதுடன், புதிதாக வரும் மாற்றாந்தாய் அல்லது வளர்ப்புத் தந்தையாலும் தாக்கப்படும் செய்திகள் ஏராளம்.
அவ்வகையில், பாகிஸ்தான் பின்னணி கொண்ட ஒரு குழந்தை பாதிக்கப்பட்டாள்.
வீட்டில் இறந்துகிடந்த குழந்தை
ஆகத்து மாதம் 10ஆம் திகதி, இங்கிலாந்திலுள்ள Woking என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாள் சாரா (Sara Sharif, 10), என்னும் சிறுமி.
உடற்கூறு ஆய்வில், அவளது உடலிலிருந்த காயங்கள், நீண்ட நாட்களாக அவள் தாக்கப்பட்டுவந்ததை உறுதி செய்தன. ஆனாலும், அவள் எதனால் மரணமடைந்தாள் என்பது தெரியவரவில்லை.
சாராவின் உடல் கண்டெடுக்கப்படுவதற்கு முந்தைய தினம், சாராவின் தந்தையான ஷெரீஃப் (Urfan Sharif) அவரது இரண்டாவது மனைவியான பட்டூல் (Beinash Batool) மற்றும் ஷெரீஃபின் சகோதரரான மாலிக் (Faisal Shahzad Malik) ஆகியோர், தம்பதியரின் ஐந்து பிள்ளைகளுடன் பாகிஸ்தானுக்குத் தப்பிச் சென்றுள்ளார்கள். அவர்களை பொலிசார் தேடி வருகிறார்கள். சாரா, ஷெரீஃபின் முதல் மனைவியான ஓல்கா (Olga Sharif)க்கு பிறந்தவர் ஆவார்.
மகளை அடையாளம் காணத் திணறிய தாய்
இந்நிலையில், சாராவை அடையாளம் காண அவளைப் பெற்ற தாயாகிய ஓல்கா வரவழைக்கப்பட்டார். ஆனால், அவரால் தான் பெற்ற குழந்தையையே எளிதாக அடையாளம் காணமுடியவில்லை.
நீண்ட நாட்களாக தொடர்ந்து தாக்கப்பட்டுவந்ததால், பிள்ளையின் முகமே மாறிப்போயிருந்தது. அவளது ஒரு கன்னம் வீங்கிப்போயிருக்க, மறு கன்னத்தில் கீறல்கள் இருந்ததாக தெரிவிக்கிறார் ஓல்கா.
பிள்ளைகளை சென்று சந்திக்க ஓல்காவுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. ஆனால், தனது மூத்த மகனும் சாராவும் தன்னைப் பார்க்க விரும்பவில்லை என்று கூறி தன்னை சாராவின் சித்தியான பட்டூல் தடுத்துவிட்டதாக கூறுகிறார் ஓல்கா.
ஆக, தன் பிள்ளையை உயிரற்ற நிலையில் மட்டுமே பார்க்க முடிந்துள்ளது ஓல்காவால். இந்நிலையில், தனது மூத்த மகன் தன்னுடன் வாழ விருப்பம் தெரிவித்துள்ளார் ஓல்கா. ஆனால், அந்த சிறுவன் இப்போது பாகிஸ்தானில் இருக்கிறான்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |