பிரான்ஸ் பிரதமர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம்: வாக்கெடுப்பு முடிவு என்ன?
பிரான்ஸ் புதிய பிரதமர் பதவியேற்று இரண்டு வாரங்களே ஆன நிலையில், பிரான்ஸ் அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
நம்பிக்கையில்லாத் தீர்மானம்: முடிவு என்ன?
பிரான்ஸ் புதிய பிரதமர் பதவியேற்று இரண்டு வாரங்களே ஆன நிலையில், பிரான்சின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட மிஷெல் பார்னியேரை பதவியிறக்கும் முயற்சியில் இடதுசாரியினர் இறங்கினார்கள்.
ஆகவே, புதிய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற 289 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், தீர்மானத்துக்கு ஆதரவாக 197 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.
ஆகவே, பிரான்ஸ் அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்துள்ளதால், புதிய பிரதமர் மிஷெல் பார்னியேர் தனது பதவியைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |