சக்திவாய்ந்த 7000 mAh பற்றரி திறன்: ரூ.15,999-க்கு மோட்டோ ஜி 67 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம்
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோ ஜி 67 பவர் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி 67 பவர்
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மோட்டோரோலா மொபிலிட்டி நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோ ஜி 67 பவர் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i, ஸ்மார்ட் வாட்டர் டெக்னாலஜி ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மோட்டோரோலா மொபிலிட்டி சீனாவின் தேசிய நிறுவனமான லெனோவா அதன் துணை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பம்சங்கள்
6.7 இன்ச் ஐபிஎஸ் LCD திரை
ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
ஸ்னாப்டிராகன் 7s ஜெனரேஷன் 2 சிப்செட்

50 + 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்கத்தில் உள்ள கேமரா
32 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
8 ஜிபி ரேம்
128 ஜிபி ஸ்டோரேஜ்
7000 mAh பற்றரி திறன்
30 வாட்ஸ் சார்ஜிங் ஸ்பீடு
5ஜி நெட்வொர்க்
USP Type-C போர்ட்
மோட்டோ ஜி 67 பவர் விலை
பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மோட்டோ ஜி 67 பவர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,999 முதல் தொடங்குகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |