அசத்தலான அம்சங்களுடன் ஜூலை 10 அறிமுகமாகும் Moto G85 5g
சீன தொழில்நுட்ப நிறுவனமான Lenovo-வின் துணை ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான மோட்டோரோலா (Motorola) தனது மோட்டோ ஜி85 5ஜி போனை இம்மாதம் 10-ஆம் திகதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது.
மோட்டோரோலா மோட்டோ ஜி85 5ஜி போன் அதன் அதிகாரப்பூர்வ இணையதளம், இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனைக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.
Moto G85 5G ஃபோன் Corning Gorilla Glass 5 பாதுகாப்பு, 120 Hz refresh rate மற்றும் 1600 nits peak brightness கொண்ட 3D curved poled display-யுடன் வருகிறது.
Moto G85 5G மொபைல் Cobalt Blue, Olive Green, Urban Grey ஆகிய வண்ண விருப்பங்களில் வருகிறது.
தூசி மற்றும் நீர் நுழைவு எதிர்ப்பிற்கான IP52 மதிப்பீடு சான்றளிக்கப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 6S Gen 3 chipset-உடன் வருகிறது. 12GB RAM மற்றும் 256GB வரையிலான in-built storage-உடன் வருகிறது.
இந்த மொபைல் 33W Fast Charging ஆதரவுடன் 5000mAh திறன் கொண்ட பேட்டரியுடன் வருகிறது.
Moto G85 5G ஃபோனில் 50-megapixel Sony LYT-600 sensor with Optical Image Stabilisation (OIS), ஒரு 8-megapixel ultra-wide Camera மற்றும் முன்புறம் 32-megapixel selfie camera உள்ளது. இந்த போனின் விலை வெளியிடப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Motorola, Moto G85 5G India Launch