Motorolaவின் பிரமிக்க வைக்கும் ஸ்மார்ட்போன் Moto Edge 2023 இந்தியாவில் லாஞ்ச்
முன்னணி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான மோட்டோரோலா சமீபத்தில் மோட்டோ எட்ஜ் 2023 என்ற புதிய போனை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பிரீமியம் ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தைக்கு வரவுள்ளது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 49,000 ஆக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Display
மோட்டோ எட்ஜ் 2023 ஸ்மார்ட்போன் அம்சங்களைப் பொறுத்தவரை, இந்த போன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. POLED, HDR10+, இந்த டிஸ்ப்ளே சிறப்பு என்று சொல்லலாம்.
OS and processor
மோட்டோ எட்ஜ் 2023 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 OS-ல் இயங்குகிறது. இதில் MediaTek Dimension 7030 SoC processor வழங்கப்பட்டுள்ளது. இது In-display Fingerprint சென்சார் அம்சத்தைக் கொண்டுள்ளது.
Camera
கேமராவைப் பொறுத்த வரையில், இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் மற்றும் 13 மெகாபிக்சல் Ultra Wide Angle கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. செல்ஃபிக்களுக்காக 32 மெகாபிக்சல் முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது.
Battery
இந்த ஸ்மார்ட்போனில் 4,400எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது, இது 68W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இது 15 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5 வாட்ஸ் ரிவர்ஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 30 மணிநேரம் நீடிக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Moto Edge 2023, Motorola Edge 2023, Moto Edge 2023 Price, Motorola Edge 2023 price in India