சுழலும் ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போனை உருவாக்கும் மோட்டோரோலா! வாய்பிளக்கவைக்கும் விபரங்கள்
சுழலும் ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போன்களை மோட்டோரோலா நிறுவனம் உருவாக்கி வருகிறது.
ரோலபில் (rollable) ஸ்கிரீன் கொண்ட புது மோட்டோரோலா ஸ்மார்ட்போன் பெலிக்ஸ் எனும் குறியீட்டு பெயர் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இது உலகின் முதல் ரோலபில் டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் எல்.ஜி. மற்றும் ஒப்போ நிறுவனங்கள் ஏற்கனவே காட்சிப்படுத்தி இருந்த சாதனங்களை விட வித்தியாசமானதாக இருக்கும் என தற்போதைய தகவல்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் முதல் ரோலபில் ஸ்மார்ட்போன் ஃபிளெக்சிபில் ஸ்கிரீனை கொண்டிருக்கும் என்றும் இதனை செங்குத்தாகவும் நீட்டிக்க முடியும் என கூறப்படுகிறது.
காம்பேக்ட் மோடில் ஸ்கிரீனின் மூன்றில் ஒரு பகுதியை கீழ்வாக்கில் சுழற்ற முடியும். அந்த வகையில் மோட்டோரோலா பெலிக்ஸ் மாடல் பாக்கெட்களில் எளிதாக வைத்துக் கொள்ளக் கூடியதாகவே இருக்கும் என கூறப்படுகிறது.