எளிமையான தொலைக்காட்சி நடிகையாக துவங்கி இன்று கோடிகளில் புரளும் நடிகை: யார் இந்தப் பெண்?
எளிமையான தொலைக்காட்சி நடிகையாக துவங்கிய ஒரு நடிகை இன்று கோடிகளில் புரளுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
யார் இந்தப் பெண்?
இந்தித் திரையுலகில் மௌனி ராய் என்னும் பெயர் தவிர்க்கமுடியாத ஒரு பெயராகிவிட்டது.
மேற்கு வங்கத்தில் பிறந்த மௌனி ராய், Kyunki Saas Bhi Kabhi Bahu Thi என்னும் தொலைக்காட்சித் தொடரில் அறிமுகமானபோது, அவர் பின்னாட்களில் பாலிவுட்டின் தவிர்க்கமுடியாத ஒருவராக மாறிவிடுவார் என அவரே நினைத்திருக்கமாட்டார்.

நாகினி என்னும் தொலைக்காட்சித் தொடரில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்த அதே நேரத்தில், அக்ஷய் குமாருடன் மௌனி ராய் நடித்த Gold என்னும் திரைப்படம் அவருக்கு நல்ல நடிகை என்னும் பெயரை பெற்றுத் தந்தது.
இன்று தொடர்ச்சியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்துவரும் மௌனிராய்க்கு, நடன நிகழ்ச்சிகளும், இசை வீடியோக்களும் வருவாயை ஈட்டித் தருகின்றன.
இந்நிலையில், மௌனி ராயின் இன்றைய சொத்து மதிப்பு 40 முதல் 41 கோடி என கூறப்படுகிறது.
மௌனி ராய்க்கு, இந்தியாவிலேயே விலைவாசி அதிகமான ரியல் எஸ்டேட் சந்தை என அழைக்கப்படும் மும்பையில் இரண்டு ஆடம்பர பங்களாக்கள் உள்ளன.
ஆடம்பரக் கார்கள் என்றால் மௌனி ராய்க்கு கொள்ளைப் பிரியமாம். மெர்ஸிடிஸ் உட்பட பல கார்களை வைத்திருக்கிறாராம் அவர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |