யூரோ கால்பந்து தொடரிலிருந்து இங்கிலாந்து வீரர்கள் இருவர் வெளியேற்றம்!
யூரோ கால்பந்து தொடரிலிருந்து இரண்டு இங்கிலாந்து வீரர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Mason Mount மற்றும் Ben Chilwell ஆகிய இரண்டு வீரர்கள் இன்றிறவு யூரோ தொடரில் செக் குடியரசுடன் இங்கிலாந்து மோதும் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இருவரும் கொரோனா உறுதியான ஸ்காட்லாந்து விரர் Billy Gilmour உடன் தொடர்பிலிருந்தது தெரியவந்ததை அடுத்து இந்ந நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இருவரும் அடுத்த வாரம் திங்கட்கிழமை வரை தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது.
யூரோ தொடரில் இங்கிலாந்த அடுத்த சுற்றுக்கு முன்னேறவுள்ளது உறுதியாகிவிட்டது. இன்றிறவு நடக்கும் போட்டியில் இங்கிலாந்து செக் குடியரவு அணியை எதிர்கொள்கிறது.
இன்று நடக்கும் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தால், இங்கிலாந்து அணி குரூப் டி பிரிவில் இரண்டாம் இடம் பிடிக்கும்.
இரண்டாம் இடம் பிடித்தால் ரவுண்ட் 16 சுற்றில் இங்கிலாந்து விளையாடும் போட்டி ஜூன் 28 திங்கட்கிழமை நடக்கும், அந்த போட்டியில் Mason Mount மற்றும் Ben Chilwell ஆகிய இருவரும் விளையாட முடியாது.
ஆனால், இன்றைய செக் குடியரசுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வெற்றிப்பெற்று முதலிடத்தை பிடித்தால், இங்கிலாந்து விளையாடும் ரவுண்ட் 16 போட்டி ஜூன் 29 செவ்வாய்க்கிழமை நடக்கும்.
செவ்வாய்க்கிழமை நடக்கும் ரவுண்ட் 16 போட்டியில் Mason Mount மற்றும் Ben Chilwell ஆகிய இருவரும் விளையாடலாம்.