அவசர சிகிச்சைப் பிரிவுக்கு நேரடியாக சென்றால் கூடுதல் கட்டணம்: சுவிட்சர்லாந்து திட்டம்
சுவிட்சர்லாந்தில், மருத்துவர் பரிந்துரையின்றி,நேரடியாக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு செல்லும் நோயாளிகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மசோதா ஒன்று சுவிஸ் நாடாளுமன்றத்தின் கீழவையில் நிறைவேறியுள்ளது.
அவசர சிகிச்சைப் பிரிவுக்கு நேரடியாக சென்றால்...
அப்படி அவசர சிகிச்சைப் பிரிவுக்கு நேரடியாக செல்பவர்களுக்கு 50 சுவிஸ் ஃப்ராங்குகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை அந்த புதிய விதி அனுமதிக்க உள்ளது.
குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் மட்டும் அந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
HUG, Geneva
இந்த புதிய விதியை எதிர்ப்போர், இந்த விதி, பக்கவாத பாதிக்குள்ளானவர்கள், கீழே விழுந்ததால் காயமடைந்தவர்கள் போன்ற பாவப்பட்ட நோயாளிகளை தண்டிப்பதுபோல் உள்ளது என்கிறார்கள்.
சுவிஸ் நாடாளுமன்றத்தின் கீழவையில் இந்த மசோதா வெறும் ஐந்து வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேறியுள்ள நிலையில், அடுத்ததாக, அது நாடாளுமன்றத்தின் மேலவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |