அரை நிர்வாணமாக இரத்தப்போக்குடன் வீடு வீடாக உதவி கேட்ட 12 வயது சிறுமி! கொடூரத்தின் உச்சம்
இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி, அரை நிர்வாணத்துடன் வீடு வீடாக உதவி கேட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
மத்திய பிரதேசத்தின் பட்நகர் என்ற பகுதியில் 12 வயது சிறுமி ஒருவர் ரத்தப்போக்குடன் வீடு வீடாக சென்று உதவி கேட்டுள்ளார்.
தெருவில் அரை நிர்வாணத்துடன் நடந்த அவர் ஆசிரமம் ஒன்றுக்கு சென்றுள்ளார். அங்கு பாதிரியார் ஒருவர் சிறுமியின் நிலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனடியாக அவரது உடலை துணியால் மறைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பாலியல் வன்புணர்வு
மருத்துவர்கள் சிறுமியை பரிசோதித்தபோது அவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாயிருந்தது தெரிய வந்தது.
அத்துடன் அவரது உடலில் காயங்கள் அதிகளவில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக இந்தூருக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சிறுமியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி, அடையாளம் தெரியாத நபர்களால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு, சாலையில் தூக்கி வீசப்பட்டுள்ளார்.
Shutterstock
மயக்கம் தெளிந்த பின்னர் அரை நிர்வாணத்துடனே அவர் சாலையில் உதவி கோருவது அங்குள்ள சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.
இதயத்தை நொறுக்கும் இந்த கொடூர சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |