மசாலாப் பொருட்கள் விற்று கோடீஸ்வரானவர்... சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
பெரும்பாலான நடுத்தர வர்க்க மக்கள் பெரும்பாலும் பெரிய வணிகங்களில் ஈடுபடுவதற்கும் அதிக முதலீடு செய்வதற்கும் பயப்படுகிறார்கள். ஆனால் முதலீடு செய்பவர்கள் வெற்றி பெறுவார்கள்.
இவ்வாறு வெற்றிப்பெற்றவர் மலபார் கோல்ட் கம்பெனியின் நிறுவனர் எம்.பி. அகமது.
ஒரு காலத்தில் மசாலா பொருட்களை விற்று வந்த அவர் இன்று ரூ.27 ஆயிரம் கோடி மதிப்பிலான நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.
மசாலாப் பொருட்கள் விற்று கோடீஸ்வரானவர்
சிறுவயதில் இருந்தே அஹம்மது வணிகம் செய்ய விரும்பினார். 1979 ஆம் ஆண்டில், 20 வயதான எம்.பி அகமது என்பவர் மசாலா வியாபாரத்தை தொடங்கினார்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கருப்பட்டி, கொத்தமல்லி, தேங்காய் வியாபாரத்தை தொடங்கினார்.
சில நாட்களுக்குப் பிறகு இந்தத் தொழில் நடக்காது என்பதை உணர்ந்தார்.
அதன்பிறகு, எம்.பி. அகமது தனது சந்தை ஆராய்ச்சியை மேற்கொண்டார். எதிர்காலத்தில் தங்கம் மற்றும் நகைகளுக்கு நிறைய கேள்வி இருப்பதைக் கண்டறிந்தார்.
எனவே, அவர் இந்தத் தொழிலைத் தொடங்கினார், இன்று அவரது நிறுவனம் மலபார் கோல்ட் ஒரு சிறந்த பிராண்டாக உள்ளது.
அவரது நிறுவனம் இப்போது இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் குவைத், பஹ்ரைன், ஓமன், கத்தார் மற்றும் சவுதி அரேபியா உட்பட 11 நாடுகளில் 325 கடைகளை நிறுவி வருகிறார்.
இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.41,000 கோடிக்கு மேல் உள்ளது. அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, இது இப்போது மிகப்பெரிய நகை பிராண்டுகளில் ஒன்றாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |