மொபைல் போன் வாங்கித்தருவதாக மனைவியை அழைத்துச் சென்ற நபர்: தொடர்ந்த பயங்கரம்
இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தில், மொபைல் போன் வாங்கித்தருவதாகக் கூறி தன் மனைவியையும் மகனையும் அழைத்துச் சென்ற ஒருவர், மனைவியை கொடூரமாக கொலை செய்ததுடன் தன் குழந்தையையும் தவிக்கவிட்டு தப்பியோடியுள்ளார்.
மொபைல் போன் வாங்கித்தருவதாக...
மத்தியப்பிரதேசத்திலுள்ள ஹிமோத்தியா என்னும் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திர அஹிர்வாருக்கு தன் மனைவி ஜோதி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஆகவே அவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்த அஹிர்வார், மனைவியையும் தனது இரண்டு வயது மகனையும் மொபைல் போன் வாங்கித்தருவதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால், கடைக்குச் செல்வதற்கு பதிலாக மரங்கள் அடர்ந்த வனப்பகுதி ஒன்றிற்குச் சென்ற அஹிர்வார், அங்கு வைத்து ஜோதியை தலையில் கல்லால் அடித்துக் கொன்றுள்ளார்.
அடுத்து நடந்தது அதைவிடக் கொடுமை. மனைவியைக் கொன்றுபோட்டுவிட்டு, தன் இரண்டு வயதுக் குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார் அஹிர்வார்.
வெளியே சென்ற அஹிர்வார் குடும்பம் வீடு திரும்பாததால் அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் பொலிசாருக்கு தகவலளிக்க, சிறிது நேரத்திலேயே அஹிர்வார் சிக்கியுள்ளார்.
விசாரணையின்போது அவர் தன் மனைவியைக் கொன்றதையும் குழந்தையை தனியாக தவிக்கவிட்டு வந்ததையும் தெரியப்படுத்த, பொலிசார் பரபரப்பாகியுள்ளார்கள்.
உடனடியாக 12 பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிசார், ட்ரோன்கள், மோப்ப நாய்களுடன் சம்பந்தப்பட்ட வனப்பகுதியைச் சென்றடைந்துள்ளார்கள்.
ஜோதியின் உடல் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், குழந்தையை தேடும் பணி தொடர, 10 மணி நேரத்துக்குப் பிறகு, புதர் ஒன்றின் அருகே பசி தாகத்துடன், தனிமையில் நடுநடுங்கிக்கொண்டிருந்த குழந்தையைக் கண்டுபிடித்துள்ளார்கள் பொலிசார்.
உடனடியாக அவனுக்கு தண்ணீர் கொடுக்கப்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளான் அந்தக் குழந்தை.
அஹிர்வார் மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள் பொலிசார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |