முதல் மனைவிக்கு தெரியாமல் மற்றொரு திருமணம்., இரண்டு குடும்பம் நடத்த ஒப்பந்தம்!
இந்தியாவில் இரண்டு பெண்களை திருமணம் செய்த நபருக்கும் அவரது இரண்டு மனைவிகளுக்கும் இடையில் ஒரு வித்தியாசமான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இரண்டு குடும்பம் நடத்த போடப்பட்ட ஒப்பந்தம்
மத்திய பிரதேசத்தில் பொறியாளர் ஒருவர் தனது மனைவிக்கு தெரியாமல் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்திகொண்டது தெரியவந்த பிறகு, இப்போது இரண்டு குடும்பம் நடத்த ஒரு வித்தியாசமான ஒப்பந்தம் போடப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
குவாலியர் நகரத்தில் நடந்த இந்த சம்பவத்தில், இரண்டு பெண்களும், இரண்டு தனித்தனி வீடுகளில் நிம்மதியாக வாழ முடிவெடுத்துள்ளனர். அதன்படி, இருவரும் தங்கள் கணவனுடன் வாழ வாரத்தில் மூன்று நாட்களை தங்களுக்குள் பிரித்துக்கொண்டனர். மீதம் இருக்கும் ஏழாவது நாளை, கணவன் விருப்பப்படும் பெண்ணுடன் கழிக்க சுதந்திரம் உண்டு.
Unsplash
குவாலியர் நகரில் உள்ள குடும்ப நீதிமன்றத்துடன் தொடர்புடைய வழக்கறிஞர் ஒருவர் இதனை கூறியுள்ளார். இருப்பினும், ஆலோசகரும் வழக்கறிஞருமான ஹரிஷ் திவான் அவர்களுக்கு இடையேயான "ஒப்பந்தம்" இந்து சட்டத்தின்படி சட்டவிரோதமானது என்று கூறினார்.
சக ஊழியருடன் இரண்டாவது திருமணம்
COVID-19 தொற்று தீவிரமாக பரவிய காலத்தின் போது குவாலியரில் தனது மனைவியை விட்டுச் சென்ற அந்த நபர், குருகிராமில் உள்ள ஒரு சக பெண் ஊழியருடன் மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த விடயம், முதல் மனைவிக்கு தெரியவந்தபோது, இரண்டு பெண்கள் மற்றும் ஒரு பொறியியலாளரின் கதை வெளிச்சத்திற்கு வந்தது என ஹரிஷ் திவான் கூறினார்.
அவரது முதல் திருமணம் 2018 இல் குவாலியரைச் சேர்ந்த பெண்ணுடன் நடந்தது, அவர்கள் இரண்டு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தனர். கோவிட் சமயத்தில், அவர் தனது மனைவியை பெற்றோரின் வீட்டிற்கு அனுப்பிவிட்டு மீண்டும் குருகிராமுக்குச் சென்றார்.
2020 வரை சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்ட மனைவியை அழைத்துச் செல்ல அவர் வராததால், சந்தேகமடைந்த முதல் மனைவி கணவனின் குருகிராம் அலுவலகத்திற்குச் சென்று பார்த்துள்ளார். அங்கு அவர் அவர் வேறொரு பெண்ணை மணந்தார் என்பதையும், அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்ததையும் அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
குடும்ப நீதிமன்றத்தை அணுகினார்
கணவனுடன் பகிரங்கமாக சண்டையிட்டு அவரது அலுவலகத்திலேயே போராட்டம் நடத்தி பிரச்சினை செய்தார். பின்னர் அவர் குவாலியரில் உள்ள குடும்ப நீதிமன்றத்தை அணுகினார்.
பின்னர், அவரது கணவர் குவாலியருக்கு வரவழைக்கப்பட்டார். அவருக்கு ஆலோசனை வழங்க முயற்சித்த போதிலும், அந்த நபர் இரண்டாவது பெண்ணை விட்டு வெளியேற மறுத்துவிட்டார்.
மேலும் அவரது மனைவி மற்றும் இரண்டாவது பெண்ணுக்கு ஆலோசனை வழங்கினர் ஆனால் அவர்கள் புரிந்து கொள்ள தயாராக இல்லை. அதன் பிறகே மூவரும் இப்படி ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டனர்.
இப்போது அந்த நபர், தனது முதல் மனைவிக்கும் மற்றும் குருகிராமில் உள்ள இரண்டாவது மனைவிக்கும் ஆளுக்கொரு வீடு வாங்கு கொடுத்துள்ளார். மேலும் அவர்களது ஒப்பந்தத்தின்படி அவர்களுடன் தனது சம்பளத்தை சமமாக பகிர்ந்து கொள்ள ஒப்புக்கொண்டார்.
இந்த ஒப்பந்தத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளதா என்று கேட்டபோது, "இந்த ஒப்பந்தம் அவர்கள் மூவருக்கும் இடையே பரஸ்பர ஒப்புதலுடன் செய்யப்பட்டது. குடும்ப நீதிமன்றத்திற்கோ கவுன்சிலருக்கோ இதில் எந்தப் பங்கும் இல்லை" என்று ஹரிஷ் திவான் கூறினார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.