ரசகுல்லா என நினைத்து வெடிகுண்டை கடித்த நபர் உயிரிழப்பு
madhya pradesh man mistakenly bite bomb for rasgulla dies at blast: மத்தியபிரதேச மாநிலத்தில், தனக்கு ரசகுல்லா எனக்கூறி வழங்கபட்டை வெடிகுண்டை கடித்த 35 வயதான ராஜேந்திர பரோதியா உயிரிழந்துள்ளார்.
ரசகுல்லா என வெடிகுண்டை கடித்த நபர் உயிரிழப்பு
மத்தியபிரதேச மாநிலம், திண்டோரி மாவட்டத்தில் உள்ள படாரியா சந்தா கிராமத்தை சேர்ந்த 35 வயதான ராஜேந்திர பரோதியா குடும்பத்தினருடன் உணவருந்தி விட்டு, இரவு நேரத்தில் முற்றத்தில் அமர்ந்து தீ மூட்டியுள்ளார்.
இரவு 8 மணிக்கு அவரது வீட்டிற்கு வந்த ராம்பகத் பரோதியா என்ற கிராமவாசி, அவருக்கு அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

இதனிடையே ராம்பகத் பரோதியா தன்னிடமிருந்த பன்றிகளை கொல்லும் வெடிகுண்டை ரசகுல்லாவிற்குள் மறைத்து வைத்து ரசகுல்லா எனக்கூறி ராஜேந்திர பரோதியாவிடம் கொடுத்துள்ளார்.
அது ரசகுல்லா தான் என நம்பி ராஜேந்திர பரோதியா வாயில் வைத்து கடிக்க தொடங்கிய உடன் வெடிகுண்டு பலத்த சத்தத்துடன் வெடித்துள்ளது.
இதில், ராஜேந்திர பரோதியா வாய் மற்றும் தாடை பகுதியில் பலத்த காயமடைந்த நிலையில், உடனடியாக சிகிச்சைக்காக மருத்துமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி ராஜேந்திர பரோதியா உயிரிழந்துள்ளார்.
ராம்பகத் பரோதியா மீது வெடிபொருள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ள காவல்துறையினர் அவருக்கு வெடிகுண்டு எப்படி கிடைத்தது, அதை ராஜேந்திர பரோதியாவிற்கு கொடுத்த நோக்கம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.