சிங்களவர்களுக்கு விடுதலைபுலிகள் என்றால் பயம்! உண்மையை உடைக்கும் தமிழ் அரசியல்வாதி
சிங்களவர்களுக்கு விடுதலைபுலிகள் என்றால் பயம்! என நாடாளுமன்ற உறுப்பினரான இ.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் மூன்று மொழிகளிலும் பேசுவதால் சிங்களவர்களுக்கு இவரை பிடித்துவிடும் என்று சிங்கள அரசியல்வாதிகள் நம்புகின்றார்கள்.
ஆகவே அவரை பலரும் நாடாளுமன்றத்தில் பலவாறு தாக்கி பேசியுள்ளார்கள் என லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
போராட்டம்,
கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் என்னை அழைத்தார்கள். ஆனால் நான் அதை நிராகரித்தேன். அது மக்களுடைய போராட்டம் அதில் நான் கலந்துக்கொள்வது சரியில்லை என நினைத்தேன்.
இருப்பினும் நான் சிங்களத்தில் பேசி தமிழ் மக்களின் பிரச்சினைகளை கூறுவதால், தமிழர்களுக்கு பிரச்சினை உள்ளதாக சிங்கள மக்கள் யோசிப்பார்கள். அவ்வாறு நடந்தால் அது பாதகமாக மாறிவிடும் என்று இழிவுப்படுத்தினார்கள்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து எங்களுடைய மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் உயிர் தியாகம் செய்தவர்களின் எண்ணிக்கை ஏராளம் என அவர் மேலும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |