மாமியாரை கொலை செய்ய ஆள் ஏற்பாடு செய்த இளம்பெண்: பயங்கர பின்னணி
இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தில், தனது மாமியாரைக் கொலை செய்ய ஆள் ஏற்பாடு செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள ஒரு பெண், விசாரணையில் கூறிய விடயங்கள் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளன.
மாமியாரை கொலை செய்த இளம்பெண்
இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர், ஆளைப்பார்த்தால் அப்பாவி போல் இருந்துகொண்டு, கொலை வரை சென்றுள்ளதைக் குறித்த செய்திகள் தொடர்ச்சியாக வெளியாகிவருகின்றன.
சமீபத்தில் உத்தரப்பிரதேசத்திலுள்ள ஜான்சி என்னுமிடத்தில், சுஷிலா தேவி (60) என்னும் பெண் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
அவரது நகைகள் காணாமல் போயிருக்க, கொள்ளை முயற்சியின்போது அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் முதலில் எண்ணியிருக்கிறார்கள்.
ஆனால், சுஷிலாவின் மகனான சந்தோஷின் முதல் மனைவிக்கு, தனது கணவரின் இரண்டாவது மனைவியான பூஜா யாதவ் (29) மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சந்தோஷ் தன் மனைவியுடன் வாழும்போதே பூஜாவைத் திருமணம் செய்துகொள்ள, அந்தப் பெண் வீட்டைவிட்டு வெளியேற, பூஜா சந்தோஷ் வீட்டில் வசதியாக செட்டில் ஆகிவிட்டார்.
விடயம் என்னவென்றால், பூஜா ஒருவருக்கு பணம் கொடுத்து தன் முதல் கணவரைக் கொல்ல ஏற்பாடு செய்ய, அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைக்க, பூஜா சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
ஜாமீனில் வந்த பூஜா, தன் மீதான கொலை முயற்சி வழக்கு தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு வந்த இடத்தில், மற்றொரு குற்றவாளியை சந்தித்துள்ளார்.
அவரது பெயர், கல்யாண். தனக்கு கணவர் இருக்கும்போதே, பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கல்யாணுடன் ரகசியமாக வாழத்துவங்கியுள்ளார் பூஜா.
ஆனால், கல்யாண் ஒரு விபத்தில் உயிரிழந்துவிட்டார். அதைத் தொடர்ந்து கல்யாணின் குடும்பத்தினரை அணுகி உதவி கோரிய பூஜா, கல்யாணின் அண்ணனான சந்தோஷுடன் நெருங்கிப் பழகத்துவங்கி, அவரைத் திருமணம் செய்துகொண்டு, அவர்கள் வீட்டிலேயே வாழத் துவங்கியுள்ளார்.
அதைத் தொடர்ந்து சந்தோஷின் மனைவி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அந்த சந்தோஷின் மனைவிதான் இப்போது பூஜா மீது சந்தேகப்பட, பொலிஸ் விசாரணையில் தான் செய்த எல்லா குற்றங்களையும் ஒப்புக்கொண்டுள்ளார் பூஜா.
நடந்தது என்ன?
அதாவது, பூஜா, கல்யாணின் சொத்து ஒன்றை விற்க விரும்பியுள்ளார். ஆனால், அதற்கு அவரது தாயார், அதாவது, பூஜாவின் தற்போதைய மாமியார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஆகவே, தன் மாமியாரை ஒழித்துக்கட்ட, தன் சகோதரியான காமினி, மற்றும் காமினியின் காதலனான அங்கிட் ஆகியோர் உதவியை நாடியுள்ளார் பூஜா.
அவர்கள் சுஷிலாவை கொலை செய்துவிட்டார்கள். ஆக, பூஜா, காமினி மற்றும் அங்கிட் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |