பாலஸ்தீன விவகாரம்... வெளியே தலைகாட்ட அஞ்சும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நினைவேந்தல் ஞாயிறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாலஸ்தீன விவகாரம் தொடர்பாக மக்களால் துன்புறுத்தப்படவோ தாக்கப்படவோ வாய்ப்பிருப்பதாக கூறி மிகவும் கவலையடைந்துள்ளனர்.
தங்களுக்கு சிறப்பு பாதுகாப்பையும்
பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொடர்புடைய நாளில் தங்களுக்கு என சிறப்பு பாதுகாப்பையும் கேட்டுப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காஸா விவகாரத்தில் பல நாட்டு அரசாங்கங்கள் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்க, பொதுமக்கள் பாலஸ்தீன ஆதரவு நிலையை எடுத்துள்ளனர்.
@alamy
பிரித்தானியாவில் ரிஷி சுனக் அரசாங்கம் இஸ்ரேல் ஆதரவு நிலையை எடுத்திருக்க, பெரும்பாலான மக்கள் பாலஸ்தீன ஆதரவு பேரணிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகின்றனர்.
இந்த நிலையில் எதிர்வரும் ஞாயிறன்று நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட இருக்கிறது. அந்த நாளில் பாலஸ்தீன ஆதரவு பேரணி முன்னெடுக்கப்படலாம் என்ற அச்சம் ரிஷி சுனக் அரசாங்கத்திற்கு எழுந்துள்ளது.
பிரதமர் சுனக் எச்சரிக்கை
இதனையடுத்து பிரதமர் சுனக் பாலஸ்தீன ஆதரவு மக்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார். அத்துடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட உரிய அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
@rex
இதனிடையே, பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவிக்கும் நிகழ்வுகளின் போது அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்றைய தினம் எங்கே செல்வார்கள் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும் என்பதால், பாதுகாப்பை பலப்படுத்துவதை தவிர வேறு வழியில்லை என தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |