மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக மாட்டார் ! நாமல் ராஜபக்ஷ தகவல்
இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவரது மனைவுயுடன் இன்று காலை திருகோணமலைக்கு தப்பிச் சென்று அங்கு தங்கியிருப்பதாகவும் அவர் நாட்டை விட்டு வெளியேறப்போவதாகவும் தகவல் வெளிவந்த வண்ணமே உள்ளது.
இந்நிலையில் நாமல் ராஜபக்ஷ “நாங்கள் நாங்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக பல வதந்திகள் பரவுகின்றன. நாங்கள் நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக மாட்டார்“ எனவும் பேட்டி அளித்துள்ளார்.
மேலும் என் தந்தை பாதுகாப்பாகவும் குடும்பத்துடனும் தொடர்பில் இருப்பதாகவும் AFP செய்தி நிறுவனத்திற்கு நாமல் பேட்டி அளித்துள்ளார்.
எந்த நிலையிலும் எப்போதும் எங்கள் மக்களுடனே நிற்போம் எனவும் தெரிவத்துள்ளார்.
முன்னாள் பிரதமரை வெளியில் வருமாறு கோரி திருகோணமலை கடற்படை முகாமிற்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடியுள்ள வேளையிலேயே நாமல்லின் கருத்துக்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.